மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட்ட குபேரா.. தனுசுக்கு ஏற்பட்ட சிக்கல்

Dhanush : தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கிறது குபேரா படம். இப்படம் வருகின்ற ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதில் நாகர்ஜுனா, ராஸ்மிகா மந்தனா போன்ற பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

முன்பு குபேரா படத்தை சென்சருக்கு அனுப்பப்பட்ட நிலையில் U/A சான்று வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் மீண்டும் குபேரா படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறதாம். அதாவது இந்த படத்தை ஜூலை மாதம் வெளியிட தான் படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஆனால் அமேசான் இடம் இதற்கான ஓடிடி உரிமை விற்கப்பட்டிருக்கிறது. அதோடு பலமுறை குபேரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றப்பட்டு வந்தது. இதனால் கடைசியாக ஜூன் 20ஆம் தேதி இந்த படத்தை வெளியிட வேண்டும் என அமேசான் நெருக்கடி கொடுத்திருக்கிறது.

மீண்டும் சென்சாருக்கு அனுப்பப்பட்ட குபேரா

இதனால் படத்தின் பாதி காட்சிகள் டிரிம் செய்ய முடியாமல் அப்படியே சென்சாருக்கு அனுப்பப்பட்டது. மொத்தமாக இந்த படம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் கொண்டுள்ளது. ஏற்கனவே நீண்ட நேர படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது.

அதோடு குபேரா படம் ஐந்து மொழிகளில் வெளியாக்குவதால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு நேரம் அதிகமாக இருப்பது அலுப்பை தட்டும். இதனால் வணிகரீதியாக இந்த படத்தை வாங்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றார்கள்.

இதன் காரணமாக இப்போது பதினான்கு நிமிடங்கள் குறைத்து 3 மணி நேரம் ஒரு நிமிடமாக மீண்டும் குபேரா படத்தை சென்சாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. தனுஷ் கடைசியாக இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் குபேரா படத்திற்கும் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →