தம்பியால் கேப்டன் மகனை டீலில் விட்ட லாரன்ஸ்.. மீடியாவுக்கு முன்பு ஜம்பம் காட்டியதுலாம் பொய்யா மாஸ்டர்?

Raghava Lawrence: கேப் கிடைக்குற இடத்துல எல்லாம் ஸ்கோர் பண்றதுன்னு சொல்வாங்க. இதை தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் பக்காவாக செய்வார்கள். அந்த கூட்டத்தில் ஒருவர் தான் ராகவா லாரன்ஸ். ஒவ்வொரு இடத்திலும் அவர் பேசும் சில விஷயங்கள் என்ன மனுஷன்யா இவரு என்று பிரமிக்க வைக்கும்.

சமீபத்தில் தமிழக மக்களை உலுக்கிய பெரிய விஷயம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு தான். அவர் இறந்தபோது நிறைய நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

முதன்முதலில் நடிகர் விஜய் தன்னுடைய GOAT படத்தில் விஜயகாந்தின் ஏஐ காட்சிகளை வைக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. ராகவா லாரன்ஸ் இதிலிருந்து ஒரு படி மேலே போய்விட்டார்.

மீடியாவுக்கு முன்பு ஜம்பம் காட்டியதுலாம் பொய்யா மாஸ்டர்?

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்க இருக்கும் படைத்தலைவன் படத்தில் தானும் கூட நடித்து அவரை தூக்கி விட இருப்பதாக சொன்னார். உடனே தமிழ் சினிமா ரசிகர்களும் லாரன்ஸை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

கேப்டன் விஜயகாந்த் மூலம் வளர்ச்சி அடைந்த விஜய் கூட இப்படி ஒரு விஷயத்தை செய்யவில்லையே என விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால் தற்போது ராகவா லாரன்ஸ் உடைய ஜம்பம் வெளியாகி விட்டது. ஆனால் இன்று வரை லாரன்ஸ் இதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தன்னுடைய தம்பி எல்வின் நடிக்கும் புல்லட் படத்தில் மட்டும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். சண்முக பாண்டியன் லாரன்ஸ்காக காத்திருக்காமல் தன்னுடைய படத்தை ஆகஸ்ட் 23 ரிலீஸ் பண்ண இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →