ரஜினி, விஜய் கூட நடிச்சாச்சு, அடுத்து அஜித் தான்..AK 64-ல் தரமான சம்பவம்

Ajith : சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் வேற்று மொழியில் உள்ள நடிகர்கள் அதிகம் நடித்து வருகிறார்கள். குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களில் இது போன்ற மற்ற மொழி நடிகர்கள் நடித்தால் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் அமோகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அந்த வகையில் விஜய் மற்றும் ரஜினியுடன் நடித்த நடிகர் இப்போது அஜித்துடன் கூட்டணி போட இருக்கிறார். அதாவது அஜித் குட் பேட் அக்லி படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி போட இருக்கிறார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த சூழலில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சமீபகாலமாக மோகன்லால் தமிழ் படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

ஏகே 64 நடிக்க போகும் மலையாள நடிகர்

விஜய்யின் தந்தையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது ஜெயிலர் 2 படத்தில் இடம்பெறுகிறார். இந்த சூழலில் முதல் முறையாக அஜித்துடன் ஒரே திரையில் வர இருக்கிறார்.

ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு தரமான சம்பவத்தை ஏகே 64 படத்தில் கொடுக்க இருக்கிறார் என்பது தெரிகிறது. மேலும் மலையாளத்திலும் மோகன்லால் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் தெலுங்கு ரசிகர்களை கவருவதற்காக ராணாவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →