யாரு படம் ஓடுனாலும் ஹீரோ அவர் தான்.. தனுஷை மொத்தமாய் காலி பண்ணிய நாகார்ஜுனா!

Dhanush: சமீபத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளியாக இருக்கும் குபேரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தனுஷ் மற்றும் படத்தில் நடித்த பலரும் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

குபேரா படத்தை தாண்டி இன்னொரு விஷயமும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இருந்து வைரலாகி கொண்டு இருக்கிறது.

மொத்தமாய் காலி பண்ணிய நாகார்ஜுனா!

இதை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்ததே நாகார்ஜுனா தான். குபேரா படம் பற்றி பேசிய நாகார்ஜுனா அப்படியே கூலி படத்தின் அப்டேட்டை அசால்ட்டாக கொடுத்துவிட்டார்.

குபேரா படத்தை தாண்டி தற்போது கூலி படத்தில் ரஜினிக்கு நாகார்ஜுனா வில்லனாக நடிக்கிறார் என்ற அப்டேட் தான் தற்போது பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

மேலும் குபேரா பட ப்ரொமோஷனுக்காக நாகார்ஜுனா கலந்து கொள்ளும் எல்லா போட்டியிலும் நாகார்ஜுனாவிடம் கூலி படம் பற்றி தான் கேட்கப்படுகிறது. அவரும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மாஸ் அப்டேட்டுகளை அள்ளித் தெளித்து வருகிறார்.

தெரிந்தோ தெரியாமலோ குபேரா படத்தின் எதிர்பார்ப்பை தாண்டி தற்போது கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துவிட்டார் நாகார்ஜுனா. கடைசியில் படையப்பா படத்தில் ரஜினி, மாப்பிளை இவர் போட்டிருக்கும் சட்டை என்னோடது என்ற கதை ஆகிவிட்டது.