புடிச்சத பண்ணா லட்சம் பேரும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகலாம்.. வெளியானது அன்னபூரணி ட்ரெய்லர்

Annapoorani Trailer: நயன்தாராவின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் இப்போது வெளியாகி கொண்டிருக்கிறது. ஜவான், இறைவன் படங்களை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி டிசம்பர் 1ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான ப்ரமோஷன் வேலைகளில் படகுழு இப்போது இறங்கியுள்ளது.

ஆச்சாரமான ஐயர் வீட்டு பெண்ணாக இருக்கும் நயன்தாரா சமையல் கலையில் அதிக ஆர்வம் காட்டுகிறார். அதற்காக அசைவ உணவு சமைக்கவும் அவர் முயற்சி செய்கிறார். அதில் அவர் சந்திக்கும் சவால்கள் என்ன? அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா என்பதுதான் இப்படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜாலியான ஒரு கேரக்டரில் நடித்திருக்கும் நயன்தாரா இதன் மூலம் ஒரு வெற்றியை கொடுக்கவும் தயாராகியுள்ளார். மேலும் ராஜா ராணிக்கு பிறகு ஜெய், நயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படி பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இதன் ஆரம்பத்திலேயே நயன்தாரா சிறுவயதிலேயே இந்தியாவின் பெஸ்ட் செஃப் ஆகணும் என்ற கனவோடு இருக்கிறார். ஆனால் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்திருக்கும் இவருடைய கனவுக்கு பல தடைகள் வருகிறது. தெருவுல கிரிக்கெட் விளையாடுறவங்க எல்லாம் சச்சின் ஆக முடியாது. பஸ் கண்டக்டர் எல்லாரும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது என நயன்தாராவின் ஆசை நிராகரிக்கப்படுகிறது.

ஆனால் புடிச்சதை பண்ணா லட்சத்துல ஒருத்தவங்க இல்ல லட்சம் பேரும் சூப்பர் ஸ்டார் ஆகலாம் என நயன்தாரா தன் கனவை நோக்கி செல்கிறார். அதற்காக சில பல பொய்களை சொல்லும் அவர் எதிர்பாராத இடையூறுகளையும் சந்திக்கிறார். இப்படியாக செல்லும் இந்த ட்ரெய்லரில் ஜெய், சத்யராஜ் கதாபாத்திரங்கள் கவனம் ஈர்ப்பதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.