நயன்தாரா 2003 ஆம் ஆண்டு சினிமா உலகிற்கு வந்தாலும், 2004 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஐயா, சந்திரமுகி, கஜினி, என ஹாட்ரிக் ஹிட். அதன் பின் தொடர்ந்து ஏறுமுகம் தான், இருபது வருடங்கள் அசைக்க முடியாத வளர்ச்சி. இதுவரை அவரிடம் உள்ள சொத்து மதிப்பு 250 கோடிகள்.
150 கோடி மதிப்பில் பங்களாக்கள்: கேரளா மற்றும் மும்பையில் இவருக்கு தனி வில்லாக்கள் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஹைதராபாத்தில் ஆடம்பரமான 20 கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்டுகள் வைத்திருக்கிறார்.
கார் கலெக்ஷன்கள் : பென்ஸ், ஆடி கார், ஃபோர்டு எண்டெவர், பிஎம்டபிள்யூ டொயோட்டா இன்னோவா போன்ற கார்கள் வைத்திருக்கிறார் அது மட்டும் இல்லாமல் Mercedes-Maybach GLS 600 என்ற கார் வைத்திருக்கிறார். இவரிடம் இருப்பதிலேயே இதுதான் விலை உயர்ந்த காராகும் இதன் மதிப்பு 6 கோடிகள்.
பிரைவேட் ஜெட்: சுமார் 50 கோடிகள் மதிப்பிலான தனி ஜெட் ஒன்று வைத்திருக்கிறார். இந்தியாவிற்குள் எங்கே சென்றாலும் பெரும்பாலும் அதில் தான் பயணித்து வருகிறார். தமிழ் நடிகைகளின் வேறு யாரிடமும் விமானம் கிடையாது இவர் தான் முதலாவதாக வாங்கியது.
ரவுடி பிக்சர்ஸ்: கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். அதன் மூலமும் வருடத்திற்கு 30 முதல் 40 கோடிகள் வரை சம்பாதித்தும் வருகிறார்.
பிசினஸ்: 9 ஸ்கின் என்ற ஒரு கம்பெனியும் நடத்தி வருகிறார். முகப்பொலிவு க்ரீம் ஒன்றையும் வியாபாரம் செய்து வருகிறார் அது மட்டுமில்லாமல் Femi 9 என்ற சானிட்டரி பேட் நிறுவனத்தையும் நடத்தி அதன் மூலம் கோடிகளில் சம்பாதித்தும் வருகிறார்.
பங்குச்சந்தை: இவைகளுக்கு அப்பாற்பட்டு தான் சம்பாதிக்கும் ஒரு தொகையை ஷேர் மார்க்கெட்டிலும் இன்வெஸ்ட்மென்ட் செய்துள்ளார்.அதன் மூலமும் வருவாய் ஈட்டி வருகிறார். இனிமேல் அவர் நடிக்காவிட்டாலும் கூட சம்பளம் வருவதற்கு பேக்ரவுண்ட் செட் பண்ணி வைத்துவிட்டார்.