அண்ணாத்த பட தோல்விக்கு ரஜினியோ, சிவாவோ காரணம் இல்ல.. இவங்களால தான் மொத்தமா போச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறுத்தை சிவா, சன் பிக்சர்ஸ் என மிகப்பெரிய கூட்டணியில் உருவாகி இருந்த படம் அண்ணாத்த. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்திருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

ஆனால் படம் வெளியாகி மோசமான விமர்சனங்களையும் பெற்றது. மற்ற ரசிகர்களை காட்டிலும் ரஜினி ரசிகர்களுக்கே இந்த படத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் அண்ணாத்த பட தோல்விக்கு இயக்குனர் சிறுத்தை சிவா தான் காரணம் என்ற பலரும் கூறினார்கள்.

அரசியல் பற்றி ஊடகங்களில் பேசும் சவுக்கு சங்கர் திடீரென ரஜினியின் அண்ணாத்த படத்தை பற்றி கூறியுள்ளார். அதில் அண்ணாத்த படம் ஓடாததற்கு காரணம் இயக்குனர் இல்லை. ஏனென்றால் சிறுத்தை சிவா எப்படியும் படத்தை ஓட வைத்துவிடுவார்.

அண்ணாத்த பட தோல்விக்கு காரணம் என்ன என்று விசாரித்தேன். அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கவில்லை என்பது அப்போது தான் தெரிந்தது. அதாவது படப்பிடிப்பு தளத்தில் ரஜினியோட இரண்டு பொண்ணுங்க தான் எல்லா காட்சியையும் எடுக்க கட்டளை போடுவார்களாம்.

அந்த படத்தில் ரஜினி கையை தூக்கக்கூடாது, கால் தூக்கக்கூடாது, டான்ஸ் ஆடக்கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு இயக்குனரை வேலை செய்யவிடாமல் டென்ஷன் ஆகி உள்ளனர். இதனால் சிறுத்தை சிவாவும் வேறு என்ன செய்வதென்று தெரியாமல் கோபத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளார்.

கடைசியில் படம் வெளியாகி மோசமான தோல்வியை அடைந்தது. இதற்கு காரணம் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் என சவுக்கு சங்கர் கூறி உள்ளார். அதுமட்டுமின்றி இப்படி எல்லாம் படத்துல நடிச்சு உயிரை எடுப்பதற்கு பதிலாக ரஜினி நடிக்காமல் ஓய்வெடுத்தால் மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.