Sai Abhayankar: பொதுவாக ஒரு ஹீரோவின் படம் குறித்த அப்டேட் வெளியானால் அந்த ஹீரோவை சுற்றி தான் நெகட்டிவிட்டி வெளியாகும். ஆனால் கருப்பு படத்தை பொருத்தவரைக்கும் சூர்யாவை மறந்துவிட்டு படத்தின் இசை அமைப்பாளர் சாய் அபயங்கர் சுற்றி மொத்த நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டு இருக்கின்றன.
இன்னும் இவருடைய இசையில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் கைவசம் எக்கச்சக்க படங்கள் வந்தது. இதனாலேயே இவர் மீது அதிக எதிர்பார்ப்பும் இருந்தது. அதே நேரத்தில் சாய் அபயங்கர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் இசையமைப்பாளர் இல்லை.
இத்தனை அக்கப்போறா?
கருப்பு படத்தின் பிஜிஎம் காபி கேட் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதுவும் தெறி படத்தின் இந்தி வர்ஷன் பேபி ஜான் படத்தில் இடம்பெற்ற குத்து பாடலை தான் இவர் காபி கேட் செய்து கருப்பு படத்தில் பிஜிஎம் ஆக மாற்றி இருக்கிறார். தமன் போட்ட இசையை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். இவரா அனிருத்துக்கு போட்டியாக வரப்போகிறார் என்று ஒரு பக்கம் விவாதம் எழுந்திருக்கிறது.
இன்னொரு பக்கம் அனிருத் முழுக்க காபி கேட்டில் தான் பாடல் உருவாக்கக் கூடியவர், அப்படி இருக்கும் போது இதெல்லாம் தேவையில்லாத பேச்சுக்கள் என்று இன்னொரு சாரார் சாய் அபயங்கரருக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
நடுநிலை ரசிகர்கள் அனிருத் சினிமாவின் அனுபவம் அதிகம், சாய் அபயங்கர் இசையில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை. அப்படி இருக்கும்போது இவர்களை ஒப்பிடுவது என்பது நியாயமானது கிடையாது. மேலும் அறிமுக இசையமைப்பாளராக வரும் சாய் அபயங்கர் மீது இப்போவே எதற்காக இவ்வளவு நெகட்டிவிட்டி என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.