கெட்ட வார்த்தையால் சென்சார் போர்டை அலறவிட்ட விக்ரம்.. 19 இடத்தில் வெட்டி விட்ட வார்த்தைகள்

Vikram: சியான் விக்ரம் இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். கோலார் தங்க சுரங்கத்தை மையமாக எடுத்து வரும் இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக இயக்குனர் அறிவித்தார். ஆனால் விஎஃப்எக்ஸ் வேலைகள் மீதம் இருப்பதால் அடுத்த ஆண்டு தான் படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் நடிப்பில் பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கும் படம் தான் துருவ நட்சத்திரம். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த படத்தை ரிலீஸ் செய்ய போதுமான அளவுக்கு நிதி இல்லாத காரணத்தினால் பல வருடங்களாக படத்தை வெளியிட முடியாமல் படக்குழு அவதிப்பட்டு வந்தனர்.

இப்போது ஒரு வழியாக படம் வெளியாக உள்ள நிலையில் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கிட்டதட்ட 19 மோசமான கெட்ட வார்த்தைகளாக இடம்பெற்றிருந்த நிலையில் அதை நீக்க அல்லது சத்தம் இல்லாமல் ஒலிபரப்ப வேண்டும் என சென்சார் போல் அறிவித்திருக்கிறது.

அதுவும் விக்ரம் படத்தில் இவ்வளவு மோசமான கெட்ட வார்த்தைகளா என சென்சார் போர்டு ஆச்சரியம் அடைந்து உள்ளது. மேலும் இது பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டாலும் புது பொலிவுடன் இருப்பதால்தான் படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் முன்வந்துள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் கௌதம் மேனன் இதில் சில மாற்றங்களும் செய்துள்ளாராம்.

மேலும் படம் 2 மணி நேரம் 25 நிமிடம் கொண்டுள்ளது. தங்கலான் படத்திற்கு முன்பாகவே துருவ நட்சத்திரம் படம் வெளியாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே படம் வெளியானால் தான் இதன் உண்மை நிலை தெரிய வரும்.

அதோடு மட்டுமல்லாமல் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறாராம். இதில் சென்சார் போர்டு அதிரடியாக சில வார்த்தைகளை கட் செய்து உள்ள நிலையில் இது கௌதம் மேனனுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. மேலும் விக்ரம் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →