எதிர்நீச்சல் கதிரை ஆட்டம் காண செய்த 2 விஷயங்கள்.. குணசேகரனுக்கு ஆப்படிக்கும் மல்லுவேட்டி மைனர்

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என மனக்கணக்கு போட்டு சொத்துக்கள் அனைத்தையும் தம்பி பெயரில் உயில் எழுதி கொடுத்து விட்டார் குணசேகரன். ஆனால் அந்த தம்பி தான் அவர் கால்களை வாரி விடும் துரோகி என்று தெரியவில்லை.

குணசேகரனுக்கு தெரியாமலேயே அவர் பார்வைக்கு எட்டாத சொத்துக்களை விற்று வருகிறார் கதிர். சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு கதிர் நல்லது செய்வது போல் நடிக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கும் 2 விஷயங்களை கேட்டு பொரித்தட்டுகிறது. அவருடைய சுயரூபத்தை காட்டும் நேரம் வந்துவிட்டது.

சிறையில் குணசேகரனை சந்தித்த அவரது மகன் தர்ஷனிடம், என் சொத்துக்கு முழு வாரிசு நீதாண்டா, நீ கால் மேல் கால் போட்டு அதிகாரம் செய்யும் இடத்தில் இருக்கிறாய் என சொன்னதும் கதிருக்கு மனதிற்குள் பயம் வந்துவிட்டது.

அதை போல் வீட்டு மருமகள்களும் குணசேகரன் வெளிவருவதால் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று சொல்லியதும் கதிருக்கு ஒரு விதமான பயம் ஏற்பட்டுவிட்டது. குணசேகரன் வெளிவந்தால் கதிர் மீண்டும் சொத்துக்களை அண்ணனிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதனால் கதிர் நகர்த்தும் அடுத்த காய் என்னவென்று தெரியவில்லை. குணசேகரன் ஜாமினில் வெளிவர டெல்லி வக்கீல் முயற்சி செய்து வருகிறார். இப்பொழுது வீட்டு பெண்களும் சம்மதித்ததால் அவருக்கு எளிதாய் மாறி உள்ளது. இனிமேல் தான் இருக்கு சுவாரசியமான எதிர்நீச்சல்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment