லியோ போல் அசிங்கப்பட முடியாது.. 2000 ஆர்டிஸ்ட்டுகளுக்கு கங்குவா டீம் செய்த வேலை

2000 artists work done by Kanguva Team: நடிப்பு அரக்கன் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டத்தில் நடைபெறும் படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் கடந்த சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா, தாய்லாந்து போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யாவுடன் திஷா பதானி, யோகி பாபு, பாபி டியோல், ஜெகபதி பாபு, ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் ஆடுவதற்கு கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

தே போன்று தான் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீசான லியோ படத்தில் ‘நான் ரெடி’ பாடலுக்கு 2000 டான்ஸர்களை வைத்து படப்பிடிப்பு நடத்தினர். ஆனால் அந்த 2000 பேருக்கு சம்பள பாக்கி வைத்ததாக அவர்கள் படக்குழுவை மீடியாவில் அசிங்கப்படுத்தினார்கள்.

2000 ஆர்டிஸ்ட்டுகளுக்கு கங்குவா டீம் செய்த வேலை

அதே போன்று கங்குவா படத்திருக்கும் வந்து விடக்கூடாது. ஏனென்றால் கங்குவா படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் பட குழு பார்த்து பார்த்து செய்கிறது. அவர்களை மீறி எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்று 2000 டான்ஸர்களுக்கு பதில் கங்குவா டீம் ஒரு தரமான யோசனை செய்துள்ளது.

அந்தப் பாடலை 2000 ஆர்டிஸ்ட் வைத்து எடுப்பதற்கு பதில், இமேஜ் குளோன் (image clone ) என்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தி, அந்த காட்சியை கச்சிதமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் செலவும் மிச்சமாகும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எதற்கு சனியன தூக்கி பனியன்ல போட்டுக் கொள்ள வேண்டும் என்று கங்குவா பட குழு இப்படி ஒரு யோசனை செய்து சுதாரித்துக் கொண்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →