பெயரைக் கெடுத்துக் கொள்ளும் 2டி நிறுவனம்.. சூர்யாவிற்கு வந்த சிக்கல்

2டி நிறுவனம் சூர்யா ஜோதிகா சேர்ந்து நடத்திவரும் ஒரு தயாரிப்பு நிறுவனம். ஆரம்பத்தில் தொழிலாளர்களுக்காகவே பல திட்டங்களை கொண்டு வந்த இந்த நிறுவனம் இப்பொழுது தன் பெயரை கெடுத்துக் கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணியாற்றினால் மட்டும் போதும் வாழ்க்கையில் மேலே வந்து விடலாம் என்ற எண்ணம் அனைத்து தொழிலாளர்களிடம் இருந்தது, ஆனால் இப்பொழுது இந்த நிறுவனமா இப்படி நடந்து கொள்கிறது என்று தொழிலாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் 2டி நிறுவனமானது திங்கட்கிழமை சம்பளம் என்றால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பளத்தை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடுமாம். எந்த ஒரு குறையும் இல்லாமல் அவர்களுக்கு தேவையான நேரத்தில் தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது.

சமீபகாலமாக இந்த நிறுவனம் தங்களது தரத்தை இழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கின்றது. ஒவ்வொரு விஷயத்திற்கும் கணக்கு கேட்டு ஏன் இவ்வளவு செலவாகிறது, இதை கம்மி பண்ணுங்கள் இல்லை என்றால் வேறு ஆட்களை பாருங்கள் என்று புரோடக்சன் டீமில் இருந்து டார்ச்சர் கொடுத்து வருகின்றதாம்.

தற்போது சூர்யாவை வைத்து பாலா இயக்கி கொண்டிருக்கும் படம் கன்னியாகுமரியில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் ஆக சுதா கங்கா வேலை செய்து வருகிறார். ஒருவேளை வர்தான் இவ்வாறு பட்ஜெட்டை குறைக்கிறேன் என்ற பெயரில் நடந்து கொள்கிறாரா என்று தெரியவில்லை.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் வேலை செய்யும் அயன் தொழிலாளர்களிடம் எல்லாம் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். அவர்களுக்கு தினமும் பேட்டா 75 ரூபாயாம். அதை கூட குறைக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்களாம். இப்படி இந்த நிறுவனம் சமீபகாலமாக தனது பெயரை கெடுத்துக் கொண்டு வருகிறது.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →