லெஜண்ட் ஹீரோயினுக்கு கேக் இத்தனை கோடியா.? லேடி சூப்பர் ஸ்டாரை கதறவிட்ட அண்ணாச்சி

3 crore gold cake and get high salary for the legend movie heroine: சினிமாவில் நடிப்பதற்கு அழகும் திறமையும் தேவையில்லை, நடிக்கும் ஆசை இருந்தாலே போதும் நடித்து விடலாம் என்று புதிதாக ஒரு ஃபார்முலாவையே உருவாக்கியவர் அருள் சரவணன். 

தன்னை லெஜண்ட் சரவணன் என்றுதான் அழைக்க வேண்டும் என்று அன்பு கட்டளை வேறு போட்டுள்ளார்.நகைக் கடை துணிக்கடை விளம்பரங்களில் மாடல் நடிப்பதற்க்கு ஏன் அவ்வளவு கோடி கொடுக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களே விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தனர்.

“நானும் சளைத்தவன் அல்ல!” என்பது போல் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் தனது கடை விளம்பரங்களில் அமர்க்களமாக தோன்றினார் லெஜண்ட் சரவணன். 

விளம்பரத்தில் நடித்த போது பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானவர், அதை எதையும் கண்டுகொள்ளாமல் “நடித்தே தீருவேன்” என்று திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்து வென்றும் காட்டினார்.

நயன்தாரா தான் வேண்டும் என்று அடம் பிடித்த அண்ணாச்சி

முதல் படத்திலேயே நயன்தாரா தான் ஹீரோயினாக வேண்டும் என்று அடம் பிடித்தார். இதற்காக அவர் வசிக்கும் இடத்திலேயே குடியேறி பல  இம்சைகள் செய்தார் என்பது செவி வழி செய்தி. 

கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் நடிப்பதில்லை என்று கறாராக கூறினார் நயன்தாரா. இதனை அடுத்து நயன்தாராவை விட அழகான  நடிகை தான் வேண்டும் என்று படக்குழுவினருக்கு கட்டளையிட்டு தேடச் சொன்னாராம். 

அவ்வாறு தேடும் போது கிடைத்தவர் தான் உலக அழகி ஊர்வசி ரவுடேலா. சர்ச்சைகளுக்கு அஞ்சாத இந்த நாயகி, பிறந்த நாளுக்கே மூணு கோடி மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட கேக்கை வெட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இதை ஏற்பாடு செய்தவர் இவரது நெருங்கிய நண்பரான பாப் பாடகர் யோ யோ ஹனி சிங்.

பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்து வந்த ஊர்வசிக்கு, லெஜண்ட் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு  கிடைத்தது. சம்பளத்தை கேட்டவர் அசந்து போய் உடனே ஓகே சொல்லி விட்டாராம். 

லேடி சூப்பர் ஸ்டாரை வெறுப்பேத்தும் நோக்கில் நயன்தாராவை விட அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 20 கோடி கொடுத்து அசத்தி விட்டார் அண்ணாச்சி.

அடுத்ததாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் துரை செந்தில்குமார் இயக்கத்தில்  இரண்டாவது படத்திற்கு ரெடியாகி வருகிறார் அண்ணாச்சி. தமிழ் சினிமாவுக்கு அண்ணாச்சியின் சேவை.. தேவை!

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →