புஷ்பா வரலைன்னு தெரிஞ்சதும் சுதந்திரமா துண்டை போட்ட விக்ரம்.. ஆகஸ்ட் 15க்கு கொண்டாட்டம் போடும் 3 படங்கள்

Release postponed: புஷ்பா தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லை உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம். இப்பொழுது புலியே விலகி நிற்கிறது என்பது போல் ஆகஸ்ட் 15க்கு புஷ்பா ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. புஷ்பா படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டதால் பல படங்கள் ரேசிலிருந்து தெரித்து ஓடியது.

புஷ்பா படம் இன்னும் 40 நாட்கள் சூட்டிங் மீதம் இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் இருபத்தைந்து நிமிடம் படத்தில் இடம்பெறுகிறது. அதற்காக 20 நாட்கள் கால் சீட் தனியாக ஒதுக்கி உள்ளனர்.இப்பொழுது 40 நாட்கள் என்றால் குறைந்தது 60 நாட்கள் ஆகிவிடும். அதனால் ஆகஸ்ட் 15 புஷ்பா ரிலீஸ் ஆகாது.

இதனால் விலகி இருந்த படங்கள் எல்லாம் டக்குனு சுதாரித்துக் கொண்டு துண்டை போட்டுள்ளது. சுதந்திரமாக மூன்று படங்கள் அந்நாளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அனேகமாக புஷ்பா தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விலங்குகள் சம்பந்தப்பட்ட வி எப் எக்ஸ் வொர்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 15க்கு கொண்டாட்டம் போடும் 3 படங்கள்

இப்பொழுது புஷ்பா வழி விட்டதால், விக்ரம் நடிப்பில் உருவாகி காத்துக் கொண்டிருக்கும் தங்களான் படத்தை வெளியிட போகிறார்களாம். இந்த படத்தை விக்ரம் மலை போல் நம்பி இருக்கிறார். தங்களான் படம் ஓடவில்லை என்றால் சினிமாவில் விக்ரம் கேரியர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும்.

அடுத்த புது வரவாக, சூர்யா பாதி நடித்து விலகிய வணங்கான் படம் வெளிவரவிருக்கிறது. இந்த படம் சூர்யா பொறாமைப்படும் அளவிற்கு அருண் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறாராம். இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று படக் குழுவினர் கூறி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனை வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படம் அமரன். இந்த படம் ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்து வரதராஜனின் உண்மை கதை. இதை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் கமல் தயாரிக்கிறார். இந்த படமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →