சூப்பர் ஸ்டார் படத்தை மிஸ் செய்து புலம்பும் 3 ஹீரோயின்கள்.. சிம்ரன் தவறவிட்ட லேடி சூப்பர் ஸ்டார்

3 heroines who miss the Superstar films: சினிமாவில் நாயகனை மட்டுமே வெகுவாக கொண்டாடிய காலகட்டத்தில் வில்லனாக நுழைந்து ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ரஜினி அவர்கள் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் திரையுலகுக்கு என்ட்ரி கொடுத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி பெங்காலி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்து இன்று வரை தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து வருகிறார்.

மேலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை பலருக்கும் சூப்பர் ஸ்டாருடன் நடிப்பது என்பதை வரப்பிரசாதமாகவே கருதுகின்றனர். அப்படி சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதற்கு வந்த வாய்ப்புகளை பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவற விட்டு இன்று வரை புலம்பும் 3 ஹீரோயின்கள் இதோ,

சினேகா: என்னவளே படத்தின் மூலம் அறிமுகமான சினேகா அவர்கள் தொடர்ந்து இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக திரையில் தனது பங்களிப்பை பூர்த்தி செய்து வருகிறார். சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயாவின் கதாபாத்திரத்திற்கு முதலில் சினேகாவை பரிசீலிக்க புதுப்பேட்டை போன்ற பல படங்களில் கமிட் ஆகி இருந்ததால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதாம்.

கிரண்: ஜெமினியில் விக்ரமுடன் கிரங்கடித்த நடிகை கிரண் அவர்கள், கமலுடன் “அன்பே சிவம்” பிரசாந்துடன் “வின்னர்” அஜித்துடன் “வில்லன்” என முன்னணி நடிகர்களுடன் கமிட்டாகி தனது ஆதங்கத்தை தீர்த்தவர். ஜெமினி படத்தில் கமிட் ஆகி இருந்ததால் பாபா படத்தில் ரஜினியுடனான மனிஷா கொய்ராலா கேரக்டரை மிஸ் செய்து இருந்தார் கிரண்.

சிம்ரன்:  90 களின் கனவு கன்னி சிம்ரன், 2005 வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான சந்திரமுகியில் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ஒவ்வொருவருக்கும் இது திருப்புமுனையாக அமைந்தது. இதில் அழுத்தமான கதாபாத்திரமான ஜோதிகாவின் கேரக்டருக்கு சிம்ரன் தான் முதலில் கமிட் ஆகி ஒரு சில நாட்கள் நடித்து வந்தாராம். அதன்பின் சிம்ரன் கர்ப்பமாக இருப்பது தெரியவர இயக்குனர் பி வாசுவிடம் கூறி அந்த கேரக்டரில் இருந்து விலகினாராம். லேடி சூப்பர் ஸ்டாருக்கான அனைத்து தகுதிகள் இருந்தும், சிம்ரன் அந்த பட்டத்தை பெற முடியாதது வேதனை தான்

அஜித் விஜய் கமல் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்ட சிம்ரனுக்கு ரஜினியுடன் இணையாதது கனவாகவே இருந்து வந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட திரைப்படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே மிஸ் பண்ணாமல் “இளமை திரும்புதே! வாலிபத்தின் எல்லையில் வாசல் வந்த முல்லையே” என்று சூப்பர் ஸ்டாருடன் டூயட் பாட சந்தோஷமானார் சிம்ரன்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →