சந்தானம் விட்டுக் கொடுக்காத அந்த 5 காமெடியன்கள்.. முரட்டு வில்லனையும் மொக்க பண்ணும் கெட்ட பைய காளி

5 Comedians Who Santhanam Never Give Up in tamil cinema: “ஒருத்தரை அழ வைப்பது என்பது எளிது! சிரிக்க வைப்பதே கடினம்” தமிழ் சினிமாவில் டைமிங்கில், ரைமிங்காக காமெடி சொல்லி சகட்டுமேனிக்கு எதிராளியை  சின்னாபின்னமாக்கி கலாய்த்து தள்ளும் சந்தானத்தின் காமெடியை ரசித்த பின் சிரிக்காதவர்களே இல்லை எனலாம். அப்படி இருக்கும் சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்தபோதும் இந்த 5 காமெடி நடிகர்களை மட்டும் தனது படங்களில் தவறவிடுவதில்லை.

மொட்ட மனோகர்: விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் உதவி இயக்குனராகவும் நடிகராகவும் பணியாற்றினார் சந்தானம். அப்போது இருந்தே சந்தானம் மற்றும் மனோகரின் காமெடி சீன்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. கையை சுழட்டிக் கொண்டு சாதாரண வசனத்தை கூட தெறிக்கவிட்டு தனக்கென ஒரு டிரேடு மார்க்கை உருவாக்கி இருக்கிறார் மொட்ட மனோகர்

மொட்ட ராஜேந்திரன்: நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகமான மொட்ட ராஜேந்திரன் தொடர்ந்து சந்தானத்துடன் இணைந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஏ1 என பல படங்களிலும் காமெடியில் கலக்கியிருந்தார். சந்தானத்தின் பேய் படங்களில் முக்கிய கதாபாத்திரம் வகிக்கும் மொட்ட ராஜேந்திரனின் “லைஃப் வைஃப் ரெண்டுமே உனக்கு செட்டாகாது” என சொல்லும் காமெடி அல்டிமேட் ஆனது.

பெப்சி விஜயன்: இவரும் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி காமெடிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு சந்தானத்தின் உதவியால் காமெடியில் மக்களின் மனதை வென்றவர் ஆவார். டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் “ டேய் டேய் டேய் டே” என பல மாடுலேஷன்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தார் பெப்சி விஜயன்.

ஆனந்த்ராஜ்: 90ஸ் இல் தமிழ் சினிமாவில் மிரட்டும் வில்லனாக தோன்றியவர் தற்போது பல படங்களில் காமெடியில் கலக்கி கொண்டிருக்கிறார் ஆனந்தராஜ். சந்தானத்திற்கும் ஆனந்தராஜுக்கும் உண்மையாகவே நல்ல பாண்டிங்க் உள்ளது எனலாம். சந்தானத்தின் தில்லுக்கு துட்டு, 80ஸ் பில்டப் போன்ற பல படங்களிலும் ஆனந்தராஜை பார்க்க முடியும். தலைக்கனம் அல்லாது இந்த தலைமுறையுடன் ஆனந்தராஜ் பண்ணும் காமெடி, சிந்திக்க அல்ல சிரிப்பதற்கு மட்டுமே.

மாறன்: சந்தானத்தின் பல படங்களில் தவறாது இடம்பெறும் லொள்ளு சபா மாறன் மற்றும் சந்தானத்தின் நட்பு பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. நடிகராக மட்டுமல்லாமல் நகைச்சுவை காட்சிகள் உருவாக்கும் எழுத்தர் ஆகவும் சந்தானத்துடன் பயணப்படுகிறார் லொள்ளு சபா மாறன். டிக்கிலோனா, குலுகுலு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு, பிஸ்கோத் போன்ற படங்களிலும் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார் மாறன்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →