தமிழ்நாட்டில் அதிக வசூல் பெற்ற 5 பிறமொழி படங்கள்.. 60 கோடி கலெக்ஷன் செய்த மஞ்சுமல் பாய்ஸ்

Manjummel Boys : சமீபகாலமாக தமிழ் மொழியில் வெளியாகும் படங்களை காட்டிலும் பிறமொழி படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் அதிக வசூல் பெற்ற 5 பிற மொழி படங்களை பார்க்கலாம்.

பிரேமலு

மலையாளத்தில் க்ரிஷ் ஏ டி இயக்கத்தில் நஸ்லன் மற்றும் மமீதா பைஜு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த படம் பிரேமலு. வித்யாசமான காதல் கதையை கொண்டுள்ள இப்படம் பிப்ரவரி மாதம் வெளியானது. தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

தில்லு ஸ்கொயர்

மல்லிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொன்னலகத்த, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்து தெலுங்கில் வெளியான திரைப்படம் தில்லு ஸ்கொயர். இந்தப் படம் மார்ச் மாதம் வெளியான நிலையில் படத்திற்கு அமோக வரவேற்பை ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.

காட்ஸில்லா எக்ஸ் காங்

காட்ஸில்லா எக்ஸ் காங் தி நியூ எம்பயர் படம் மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஹாலிவுட் வெளியான இந்தப் படம் தமிழ் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் ரெபேக்கா ஹால், பிரையன் டைரி மற்றும் ஹென்றி ஆகியோர் நடித்திருந்தனர்.

குங் ஃபூ பாண்டா 4

மைக் மிக்ஸ்சில் இயக்கத்தில் ஜாக் பிளாக், அக்வாஃபினா ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ளது குங் ஃபூ பாண்டா 4. நகைச்சுவை கலந்த இப்படம் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் அடைந்துள்ளது.

மஞ்சுமல் பாய்ஸ்

சிதம்பரம் எஸ் பொதுவாள் இயக்கத்தில் பிப்ரவரி 22 மலையாள சினிமாவில் வெளியான படம் தான் மஞ்சுமல் பாய்ஸ். நண்பர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் வசூலை வாரி குவித்து வருகிறது. தமிழில் மட்டும் இந்த படம் 60 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment