AK-62, விக்னேஷ் சிவனை ஒதுக்க காரணமாய் இருந்த 5 விஷயங்கள்.. அஜித்தை இப்படி சங்கடப்படுத்தி இருக்காரே!

அஜித்தின் துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படமான ஏகே 62 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ஆனால் இந்த படத்தை எடுப்பதற்கு முன் இதற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வருகிறது. இதற்கெல்லாம் விக்னேஷ் சிவனின் பொறுப்பில்லாத அலட்சியம் தான் காரணம்.

அஜித் இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை விக்னேஷ் சிவனிடம் ஆகஸ்ட் மாதத்திலேயே கேட்டிருக்கிறார். ஆனால் அவர் அதற்கான ஸ்கிரிப்ட்டை சொல்லாமல் இழுத்தடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அஜித் கேட்கும் ஒவ்வொன்றிற்கும் விக்னேஷ் சிவன் ஆர்டிஸ்ட் தேர்ந்தெடுக்கும் வேலையில் பிஸியாக இருப்பதாக சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்.

பிறகு அஜித்தை சமாதானப்படுத்தும் விதமாக பாதி ஸ்கிரிப்ட் மட்டும் சொல்லி இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா இவர் செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அஜித்தின் ஏகே 62 படத்தை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க போவதாக வெளியிட்டனர். இதனை அறிந்த விக்னேஷ் சிவன் நேரடியாக லைக்கா நிறுவனத்திடம் சென்று தன்னை காப்பாற்றிக் கொள்ள ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இருக்கிறார்.

இவ்வளவு குளறுபடிகளை கேள்விப்பட்ட அஜித் மிகவும் அப்செட் ஆனார். ஏனென்றால் அஜித்திற்கு வருகின்ற தீபாவளி அன்று தான் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனாலே இந்த படத்திற்கான கதையைக் கேட்டு ஓகே சொல்லி இருந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் அதை அலட்சியமாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருவதால் அஜித்திற்கு மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி தொடர்ந்து விக்னேஷ் சிவன் மாத்தி மாத்தி பேசி இருப்பது அஜித்துக்கு பிடிக்கவில்லை. ஏற்கனவே அஜித் இந்த படத்திற்கு ஜூலை 15 வரை தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால் விக்னேஷ் சிவன் இப்பொழுது இந்த படத்திற்கு செப்டம்பர் வரைக்கும் டேட் கேட்டிருக்கிறார்.

இதனால் அஜித் இந்த படம் இப்பொழுது சரி வராது என்று விக்னேஷ் சிவனை ஒதுக்கி விட்டார். மேலும் அஜித்தின் ஏகே 62 படத்தை லைக்கா நிறுவனம் வேறு இயக்குனரிடம் கொடுத்து விட்டது. இதற்கான வேலைகள் கூடிய சீக்கிரமாக ஆரம்பித்து AK62 படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →