2023 நியூ இயர் ஸ்பெஷலாக புது படங்களை வெளியிடும் 5 டிவி சேனல்கள்.. டிஆர்பியில் விஜய் டிவியை முந்த ரெடியான ஜீ தமிழ்

பண்டிகை காலங்கள் என்றாலே வெள்ளி திரையில் படங்கள் வெளியாகும். அதேபோல் தான் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் அண்மையில் வெளியான புது படங்களை ஒளிபரப்பு செய்வார்கள். இதில் டிஆர்பியை பிடிக்க வேண்டும் என்பதற்காக எல்லா தொலைக்காட்சியும் போட்டி போட்டுக் கொண்டு படங்களை வெளியிடும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு நியூ இயர் ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் எந்த படம் வெளியாகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

கலர்ஸ் தமிழ் : ஹிந்தி தொடர்களை டப்பிங் செய்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பெரும்பாலான தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் வருகின்ற நியர் பண்டிகையை முன்னிட்டு பாமகலாபம் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பிரியாமணி, சாந்தி ராவ் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

கலைஞர் டிவி : கலைஞர் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான விக்ரமின் கோப்ரா படம் ஒளிபரப்பாக இருக்கிறது. விக்ரம் பல கெட்டப்பில் நடித்த இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஆகையால் படம் வெளியான சில மாதங்களிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவி : விஜய் டிவியில் 2023 ஆம் ஆண்டு புத்தாண்டு பண்டிகைக்கு எந்த படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் ஹிட் படமாக அமைந்த சீதா ராமம் படத்தை ஒளிபரப்ப இருக்கின்றனர். துல்கர் சல்மான், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

ஜீ தமிழ் : ஜீ தமிழ் தொலைக்காட்சி மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த தொலைக்காட்சியில் புதுவிதமான தொடர்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. விஜய் டிவியின் டிஆர்பியை முறியடிக்க வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு அஜித்தின் வலிமை படம் ஒளிபரப்பு செய்ய இருக்கிறது.

சன் டிவி : சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தை சன் டிவி வாங்கியுள்ளது. வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு இப்படம் மாலை ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும் பிரம்மாண்டமாக நடந்த வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் ஒளிபரப்பு செய்ய உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →