6 மாசத்துக்கு முன்பே புட்டு புட்டு வைத்த பயில்வான்.. பிசுறு தட்டாமல் வெளிவரும் நயன்தாராவின் சீக்ரட்ஸ்

சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக பல்வேறு நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே பயில்வான் ரங்கநாதன் நயன்தாராவை பற்றி சில விஷயங்களை கூறியிருந்தார். இது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அதாவது நயன்தாரா அதிக அளவு கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டதால் அவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அவருக்கு 38 வயது கடந்துள்ளதால் குழந்தை பெறுவதில் பிரச்சனை இருக்கிறது. இதனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் தான் குழந்தையை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று பயில்வான் கூறியிருந்தார்.

தற்போது பயில்வான் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது போல நேற்று விக்னேஷ் சிவன், நானும் நயன்தாராவும் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஆகி உள்ளோம் என பதிவிட்டு இருந்தார். இந்த செய்தி பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதாவது பயில்வான் முன்கூட்டியே சொன்னது போல இவர்கள் வாடகை தாய் மூலம் தான் குழந்தையை பெற்றெடுத்து இருப்பார்கள் என பலரும் கூறிவருகிறார்கள். இதுகுறித்து விக்னேஷ் சிவன் எந்த பதிவும் வெளியிடவில்லை. ஆனால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் சில விதிமுறைகள் உள்ளது.

அதாவது திருமணம் முடிந்து குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஆவது ஆகியிருக்க வேண்டும். விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருக்கும் திருமணமாகி நான்கு மாதங்கள் தான் முடிந்துள்ளது. இதனால் இவர்கள் சட்டபூர்வமாக வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் பயில்வான் முன்கூட்டியே நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரகசியத்தை உடைத்ததால் தற்போது பலரும் வியப்பில் உள்ளனர். ஒருவேளை பயில்வான் சொல்லும் விஷயங்கள் எல்லாமே உண்மையாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வர தொடங்கி உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →