முக்கியமான இந்த 7 காரணங்கள்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வெற்றிமாறனின் விடுதலை

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்த விடுதலை திரைப்படம் வரும் முப்பதாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு எகிற
முக்கியமாக ஏழு காரணங்கள் பார்க்கப்படுகின்றன. இதற்காகத்தான் ரசிகர்களும் இந்த படத்தை பார்ப்பதற்கு தவம் கிடக்கின்றனர்.

வெற்றிமாறன்: இயக்குனர் வெற்றிமாறனின் கதைகளின் மீது எப்போதுமே சினிமா கலைஞர்களாக இருக்கட்டும், அல்லது ரசிகர்களாக இருக்கட்டும் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருப்பார்கள். வெற்றிமாறனும் தன்னுடைய கதைகளில் எப்போதுமே தோற்றுப் போனதும் இல்லை. அதனால் அவருடைய அடுத்த இயக்கமான விடுதலை திரைப்படத்தின் மீதும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

‘ஏ’ சர்டிபிகேட்: மேலும் இந்த படத்திற்கு தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட பத்து முதல் 12 இடங்களில் வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில தினங்களாகவே இந்த தகவல் பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி கொண்டிருப்பது இன்னும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இளையராஜா: மீண்டும் வருடங்களுக்கு பிறகு இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவருடைய இசையில் பாடல்களையும் ஸ்கோரையும் ரசிக்க இசை ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.

ட்ரெய்லர்: இந்த மாதம் தொடக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் பாடல் நிகழ்ச்சியின் போது விடுதலை படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதில் விஜய் சேதுபதியின் வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சூரி: தமிழ் சினிமாவில் ஒரு துணை நடிகராக இருந்து காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த சூரி முதன் முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள சூரி கடுமையாக உழைத்திருக்கிறார்.

வேல்ராஜ்: பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிமாறனின் ஹிட் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் விடுதலை திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படக்குழுவின் கடின உழைப்பு: விடுதலை திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலை சார்ந்த காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக பட குழுவும் நடிகர்களும் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →