அதிக எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய 9 பான் இந்தியா படங்கள்.. லியோ உடன் போட்டி போடும் சூர்யா

இந்திய சினிமாவை பொறுத்த வரைக்கும் தற்போது பான் இந்தியா மூவிகள் என்பது பயங்கர ட்ரெண்டில் இருக்கிறது. தமிழ் சினிமாவில் இருந்து தொடங்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் இப்போது பான் இந்தியா மூவி எடுப்பதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்தடுத்து ரிலீஸ் ஆக 9 பான் இந்தியா மூவிகள் தயாராக இருக்கின்றன.

பொன்னியின் செல்வன் 2: பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வரும் ஏப்ரலில் ரிலீஸ் ஆக இருக்கிறது. முதல் பாகத்தில் அருள்மொழிவர்மன் இறந்தது போல் முடித்திருக்கும் கதைகளத்தில் அடுத்து என்ன நடக்கவிருக்கும் என இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜவான்: இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஜவான் திரைப்படம் ஜூன் இரண்டில் ரிலீஸ் ஆக இருக்கிறது. பதான் பட வெற்றியை தொடர்ந்து ஜவான் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஆதிபுருஷ்: பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயண கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ராமராகவும் நடிகை கிர்தி சனோனும் சீதையாகவும் நடிக்கிறார். இந்த படம் ஜூன் 16ல் ரிலீஸ் ஆக இருக்கிறது.

கிங் ஆஃப் கோதா: மலையாள உலகின் முன்னணி ஹீரோவாக இருக்கும் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் கிங் ஆஃப் கோதா திரைப்படம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது.

சலார்: பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் சலார். இந்த படம் செப்டம்பர் 28ல் ரிலீஸ் ஆக இருக்கிறது. கேஜிஎஃப் திரைப்பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

லியோ: மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் லியோ. இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

கேப்டன் மில்லர்: ராக்கி, சாணி காகிதம் திரைப்படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை தீபாவளியன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

ப்ராஜக்ட் கே: பிரபாஸ், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே நடிப்பில், சயின்ஸ் பிக்சன்ஸ் கதையை மையமாக கொண்டு உருவாகி கொண்டிருக்கும் பெயரிடப்படாத திரைப்படம் ப்ராஜக்ட் கே. இந்த படம் அடுத்த வருடம் ஜனவரியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

சூர்யா 42: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா தன்னுடைய 42 ஆவது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி கொண்டிருக்கிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →