ஜானு புருஷன் பாவம் பா.. வரப்போகுது 96 பார்ட் 2

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்த படம் 96. இந்த படம் பல 90ஸ் குழந்தைகளின் காதல் வலிக்கு அருமருந்தாக உள்ளது. இந்த படத்தின் இசை படத்தை அடுத்த லெவல்-க்கு எடுத்துச்சென்றது. தமிழில் சேர முடியாத காதல் பல இருந்தாலும், அந்த கதைக்களம் பல நேரங்களில் commercial success கொடுக்க தவறிவிடும்.

ஆனால் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாகவே அமைந்தது. இதை தொடர்ந்து, சில வருடங்கள் கேப் எடுத்துக்கொண்டு, அடுத்ததாக மற்ற ஒரு Feel Good படமான மெய்யழகன் படத்தை கொடுத்தார் பிரேம் குமார். இந்த படம் OTT-யில் வெளியான பின், வழக்கம் போல படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணிட்டோமே என்று மக்கள் பீல் செய்தார்கள்.

வரப்போகுது 96 பார்ட்-2

இந்த நிலையில், பிரேம் குமார் இயக்கத்தில் அடுத்து என்ன படம் வரும் என்பது ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது. அதை பற்றி சமீபத்தில் பிரேம் குமார் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

பிரேம் குமார் 96 படத்தின் sequel கதையை எழுதிக்கொண்டு இருக்கிறார். முக்கால் வாசி கதையை முடித்துவிட்டாராம்.

அந்த படத்தை முடித்துவிட்டு, ஒரு Adventure திரில்லர் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பிரேம் குமார். இதை கேட்ட 96 ரசிகர்கள், மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். மறுபக்கம், இதை ஒரு சில நெட்டிசன்கள் நக்கல் செய்தும் வருகின்றனர்.

முதல் பாகம் பார்த்தே, பலர் முன்னாள் காதலன் காதலி-க்கு போன் போட்டு விட்டார்கள். இனி கேட்கவே வேண்டாம். மேலும் ஜானு புருஷன் தான் உண்மையில் பாவம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படியாக இருந்தாலும், படம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment