விஜய்யின் அரசியல் ஆட்டத்தால் நொந்து போன அந்த பிரபலம்.. செல்ஃபி வெறி ஊறி போய் நிற்கும் தளபதி

Thalapathy Vijay: நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்ற செய்தி கடந்த வருடத்தின் தொடக்கத்திலேயே நெருப்பு போல் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அவரும் அடுத்தடுத்து லியோ படம் முடித்த கையோடு GOAT படத்தில் ஒப்பந்தம் ஆகினார். வழக்கம் போல இது வதந்தி தான், தொடர்ந்த அவர் படங்கள் தான் அடிக்கப் போகிறார் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென தன்னுடைய கட்சியை அறிவித்துவிட்டார்.

விஜய் கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வாரங்களான நிலையில் தமிழ்நாட்டில் நிறைய பெரிய தலைகளுக்கு தூக்கம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நிறைய பேர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னாலும், அவர் ஓட்டுக்களை பிரித்து விடுவாரோ என்ற பயம் அவர்களுக்கு இருக்க தான் செய்கிறது. அரசியலை தாண்டி விஜய் கட்சி ஆரம்பித்ததால் மற்றொரு பிரபலம் ரொம்பவே நொந்து போயிருக்கிறார்.

விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் போதே அரசியல் கட்சி அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார். விஜய், அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டது சரியான நேரத்தில் இல்லையோ என்ற சந்தேகம் தற்போது வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் GOAT படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தான். விஜய் கட்சி ஆரம்பித்த நாளிலிருந்து அவர் திண்டாடி வருகிறார்.

படத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து விட வேண்டும் என்ற அழுத்தம் எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும். அதிலும், வெங்கட் பிரபு இந்த படத்தில் நிறைய பெரிய நடிகர்களை புக் செய்து இருக்கிறார். அவர்களுடைய கால் ஷீட்டை சரியாக பயன்படுத்த வேண்டிய கடமை வெங்கட் பிரபுவுக்கு தான் இருக்கிறது. மாநாடு படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெங்கட் பிரபுவுக்கு வெற்றிப்படங்கள் இல்லாததால் இந்த படத்தை ரொம்பவே நம்பி இருக்கிறார்.

செல்ஃபி வெறி ஊறி போய் நிற்கும் தளபதி

வெங்கட் பிரபு இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது விஜய் தன்னுடைய கட்சி அறிவிப்பை அறிவித்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் அவருக்கு தற்போது கட்சி வேலைகள் தான் முழுக்க முழுக்க குறிக்கோளாக இருக்கிறது. கட்சி ஆரம்பித்ததில் இருந்து கட்சி வேலைகள், ஆலோசனைக் கூட்டங்கள் என ஷூட்டிங்கில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுகிறார் விஜய்.

அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலும் ரசிகர்களை சந்திப்பதற்கு பிளான் பண்ணி விடுகிறார். சூட்டிங் நடக்கும் இடத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருவதும், அவர்களுடன் விஜய் செல்பி எடுத்துக் கொள்வதும் என இப்படியே நாள் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. தவறான நேரத்தில் விஜய் கிட்ட வந்து மாட்டிக்கிட்டோமோ என வெங்கட் பிரபு இப்போது புலம்பி கொண்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →