100 கோடியில் தியேட்டர் கட்டும் பிரபல தயாரிப்பாளர்.. அடுத்து ரஜினியை வைத்து பிரம்மாண்டம் படம் எடுக்க முடிவு.!

ரஜினி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஜெயிலர் மற்றும் லால் சலாம் திரைப்படத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினியின் அடுத்த படமான தலைவர் 171 படத்தை யார் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் இயக்குனர் லோகேஷ் இயக்க இருக்கிறார் என்பது வெளியாகி உள்ளது.

அடுத்து இந்த படத்தை தயாரிப்பதற்கு நிறைய தயாரிப்பாளர்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இப்படத்தை தயாரிப்பாளர் லலித் தான் தயாரிக்கப் போவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தை தயாரித்திருக்கிறார்.

அடுத்ததாக தற்போது லியோ படத்தையும் இவர் தான் தயாரிக்கிறார். ஆனால் இப்படம் பெரிய அளவில் பட்ஜெட் என்பதால் வட்டிக்கு பணம் வாங்கி தான் படத்தை தயாரிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்நிலையில் இவர் தயாரிப்பது மட்டுமில்லாமல் அடுத்ததாக பெரிய லாபத்தை பார்க்க வேண்டும் என்ற முடிவில் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதாவது தற்போது வண்டலூர் அடுத்து முக்கியமான இடத்தில் நூறு கோடி செலவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டி வருகிறார்.  இதன் வேலைகள் மும்பரமாக நடந்து வருகிறது. அடுத்த வருடம் தீபாவளி அன்று அதை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தெரிந்த சினிமா பிரபலங்கள் பலரும் இவ்வளவு பணம் இவருக்கு எங்கிருந்து வந்தது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இதை தவிர லியோ படத்தின் பட்ஜெட் 375 கோடி தயாரிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதுவே பெரிய விஷயமாக சினிமாவில் உள்ள பிரபலங்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். அடுத்ததாக ரஜினி படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார். அந்தப் படத்திற்கு பட்ஜெட் 300 கோடி வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது சாதாரண ஆளாக இருந்த தயாரிப்பாளர் சின்ன சின்ன விஷயங்களை செய்து தற்போது தமிழ் சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளராக மாறி வருகிறார். இது இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது. அத்துடன் இதற்கு காரணம் இவர் தயாரித்த படங்கள் தான்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →