முற்றிய வீட்டு பிரச்சனை, உதயநிதி ஆதரவில் ஜேசன் சஞ்சய்.. அரசியல் வாரிசின் பரபரப்பு பேட்டி!

Vijay: தமிழகத்தில் இனி அடுத்த கட்ட அரசியல் என்பது உதயநிதி vs விஜய் என்று இருக்கும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பு.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆடு பகை, குட்டி உறவு என்பது போல் ஒரு சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் திமுகவின் முக்கிய தலைவராக இருக்கும் திருச்சி சிவா மகன் சூர்யா கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனம் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

உதயநிதி ஆதரவில் ஜேசன் சஞ்சய்

விஜய் மூலமாகத்தான் இந்த விஷயம் நடந்திருக்கும் என்று பேசப்பட்டது. உண்மையில் ஜேசன் சஞ்சய் உதயநிதியின் ரெக்கமண்டேசனில் தான் லைக்கா நிறுவனத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என சூர்யா சொல்லியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் விஜய் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை இருப்பதாகவும் ஏதாவது ஒரு கட்டத்தில் விஜய் மனைவி சங்கீதாவே அவருக்கு எதிராக பேச அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

விஜய் ஆதரவாளர்கள் பலரும் இவர் உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்து வருகிறார் என சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment