சூசக முடிச்சு போட்ட வெற்றிமாறன்.. எவ்வளவு அடித்தாலும் விடுதலை பட தயாரிப்பாளர் தாங்குவதன் ரகசியம்

சூரி கதாநாயகனாக நடித்து வரும் விடுதலை படம் பல வருடங்களாக படபிடிப்பு நடைபெற்று வருகிறது. சும்மா ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும் இப்படம் தற்போது வரை முடிந்த பாடு இல்லை. இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை படப்பிடிப்பை வனப்பகுதிகளில் சுற்றி நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் கோவிட் தொற்று காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்ட நிலையில் அதன் பிறகு விஜய் சேதுபதியின் கால்ஷூட் கிடைக்காததால் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி வெற்றிமாறன் எடுத்த காட்சியை திரும்பத் திரும்ப எடுத்து வருகிறாராம்.

மேலும் விடுதலை படத்தில் உள்ள கெட்டபினால் சூரி மற்ற படங்களிலும் கமிட் ஆகாமல் உள்ளார். நாளுக்கு நாள் விடுதலை படத்தின் பட்ஜெட்டும் எகிறிக்கொண்டே போகிறதாம். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் இதைப் பற்றி எதுவுமே பேசாமல் உள்ளாராம்.

சாதாரணமாக படத்தின் பட்ஜெட் இயக்குனர்கள் சொன்னதை விட அதிகமானால் தயாரிப்பாளர்கள் கொந்தளிப்பாளர்கள். ஆனால் விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எவ்வளவு அடித்தாலும் தாங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறதாம். அதாவது வெற்றிமாறன் அவருக்கு ஒரு சூசக முடிச்சு போட்டு உள்ளார்.

நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள், இந்த படத்தின் பட்ஜெட் முன்ன, பின்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம். அடுத்ததாக தனுஷ் எனக்கு கால்ஷீட் கொடுப்பதாக வாக்கு கொடுத்துள்ளார். அதனால் கண்டிப்பாக தனுஷ் அடுத்ததாக என் படத்தில் தான் நடிப்பார்.

அந்தப் படத்தை நான் உங்களுக்கு பண்ணித் தருகிறேன் என வெற்றிமாறன் விடுதலை தயாரிப்பாளருக்கு வாக்கு கொடுத்துள்ளாராம். இதை நம்பி தான் அந்த தயாரிப்பாளரும் இந்தப் படத்தில் ஓரளவு லாபம் பார்க்காவிட்டாலும் தனுஷ் படத்தில் சமாளிச்சுக்கலாம் என்று நினைப்பில் உள்ளாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →