செல்லப் பிள்ளைக்கு இந்தியன் 2-வை வாரி வழங்கிய ரெட் ஜெயன்ட்.. உதயநிதிக்கு வலது கையாக வலம் வரும் தயாரிப்பாளர்

Udhayanidhi : ரெட் ஜெயன்ட் நிறுவனம் இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நிறுவனமாக மாறி இருக்கிறது. படங்கள் ஒரு முறை தயாரித்தாலும் விநியோகஸ்தராக உதயநிதி முதலிடத்தில் தான் இருந்தார். குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு படங்களை வெளியிடுவதில் நிறைய சிரமங்கள் இருந்தது.

அதுவும் குறிப்பாக தயாரிப்பாளர்கள் பணத்தை சரியாகப் பெறவும் சிக்கல் இருந்தது. ஆனால் உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மூலம் படங்களை விநியோகம் செய்த நிலையில் கணக்கு வழக்கு எல்லாமே சரியாக இருந்தது.

இப்போது பெரிய நடிகர்களின் படங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில் இந்தியன் 2 படத்தையும் இந்நிறுவனம் விநியோகம் செய்கிறது. லைக்கா உடன் ஷங்கருக்கு பிரச்சனை ஏற்பட்ட நிலையில் உதயநிதி தலையிட்டு பிரச்சனையை சமூகமாக முடித்தார்.

இந்தியன் 2வை விநியோகம் செய்யும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட்

இப்போது இந்தியன் 2 திரைக்கு வர உள்ள நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் விநியோகம் செய்கிறது. அதேபோல் கேரளாவில் கோகுலம் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் ரெமோ பிக்சர்ஸ் சார்பாக ராகுலுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

உதயநிதியின் வலது கையாக செயல்பட்டு வருபவர்தான் ராகுல். தமிழ்நாட்டில் உதயநிதி விநியோகம் செய்யும் படங்களை கர்நாடகாவில் ராகுல் தான் விநியோகம் செய்கிறார். இவர் பெயரில் நிறைய படங்களை உதயநிதி வியோகம் செய்து வருகிறார்.

இவர்களுக்குள் ஒரு சுமூகமான நட்பு தற்போது வரை இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் உதயநிதியின் செல்லப் பிள்ளையாக ராகுல் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் ஜூன் மாதம் வெளியாகும் நிறைய படங்களை உதயநிதி விநியோகம் செய்ய காத்திருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →