கைவசம் படங்கள் இல்லாமல் கஷ்டப்படும் முரட்டு வில்லன்.. ஜெயிலர் விநாயகத்தால் பறிபோன வாய்ப்புகள்

Opportunities lost by Jailer Vinayakan: ஒரு படத்தில் ஹீரோக்கான முக்கியத்துவம் என்பது அதில் கமிட் ஆகி உள்ள முரட்டு வில்லன்களை பொறுத்து அமையும். அதாவது ஒரு வெயிட்டான கதாபாத்திரத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் விதமாக வில்லன் கேரக்டர் இருக்க வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் வருமன் கேரக்டரை மறக்க முடியாத அளவிற்கு கொடூர வில்லனாக நடித்தவர் தான் விநாயகன்.

ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இப்படம் தான் இவருக்கு செகண்ட் இன்னிங்ஸில் தூக்கிவிட்ட படமாக கை கொடுத்திருக்கிறது. இதில் இவருடைய நடிப்பை பார்த்து மிரண்டவர்கள் ஏராளமானவர்கள். அதனாலேயே என்னமோ தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.

இவர் வந்ததற்கு பிறகு ஏற்கனவே பல படங்களில் முரட்டு வில்லனாக நடித்து வந்த டேனியல் பாலாஜிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு பறிபோய் கொண்டிருக்கிறது. இவரிடம் தற்போதைக்கு எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதற்கு இடையில் கேப்டன் மில்லர் படத்தில் வில்லன் கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது.

ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் அந்த வாய்ப்பு இவரிடம் இருந்து பறிக்கப்பட்டு விநாயகத்திற்கு போய்விட்டது. அதனால் இப்போதைக்கு இவர் ஒருவரே அனைவரது கண்ணுக்கும் முரட்டு வில்லனாக தென்படுகிறார். ஆனால் இந்த இரண்டு வில்லங்களின் நடிப்பும் ரொம்பவே ஒத்துப் போகும் அளவிற்கு கொடூரமாகத் தான் மிரட்டுவார்கள்.

இருந்தாலும் தமிழ் சினிமாவில் எப்போதுமே மறக்க முடியாத வில்லனுக்கு பெயர் போனவர் டேனியல் பாலாஜி. அதுவும் வேட்டையாடு விளையாடு, பைரவா, பிகில் வடசென்னை போன்ற படங்களை மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு மிரட்டியை இவருக்கு தற்போது வாய்ப்புகள் இல்லாமல் அலைமோதி கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வந்த வில்லன் விநாயகனுக்கு பட வாய்ப்பு குவிந்த வண்ணமாக வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →