ராட்சசன் கிறிஸ்டோபர் மாதிரி ஆயிட்டாரு.. ஷாக் கொடுக்கும் அஜித்தின் வைரல் புகைப்படம்

Ajith: அஜித் இப்போது கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். அதே சமயம் நடிப்பையும் அவர் விட்டுவிடவில்லை. தன் மேல் அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்காக அதிலும் கவனம் செலுத்துகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி வெற்றி பெற்ற நிலையில் அடுத்த பட அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவரின் அடுத்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்தையும் ஆதிக் தான் இயக்குகிறார். விரைவில் இந்த அறிவிப்பு வர இருக்கிறது. அதேபோல் இப்படத்திற்காக அஜித்துக்கு அதிகபட்ச சம்பளமும் பேசப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க அவ்வப்போது அஜித்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளிவருவதுண்டு. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் போட்டோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனென்றால் அதில் அவர் ஆள் மிகவும் மெலிந்து போய் காணப்படுகிறார். அதே போல் முகத்தில் சற்று முதிர்ச்சியும் தென்படுகிறது.

இதைப் பார்த்த இணையவாசிகள் என்ன அஜித் ராட்சசன் படத்தில் வரும் கிறிஸ்டோபர் மாதிரி ஆயிட்டாரு என கமெண்ட் கொடுத்து வருகின்றனர். உண்மையில் திடீரென பார்க்கும்போது நமக்கும் அப்படித்தான் தெரிகிறது.

ஏன் அவருடைய உடல்நலையில் இவ்வளவு மாற்றம் என தற்போது அடுத்தடுத்த கேள்விகளும் முளைத்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் அவரின் அடுத்த படத்திற்கான அவதாரமா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →