20 வருடம் கழித்தும் Trend ஆனா அந்நியன்.. எப்படி இருந்த ஷங்கர் இப்படி ஆயிட்டாரு!

Movie : 2005-ஆம் ஆண்டில், சியான் விக்ரம் நடிப்பில் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளிவந்து மக்கள் மனங்களை ஆட்டிப்படைத்த திரைப்படம் தான் அந்நியன்.

மூன்று வேடங்கள்!

ஒரு மனிதனின் மூன்று தனிப்பட்ட மனநிலைகள் – அம்பி, ரெமோ, அனியன் என மூன்று வேடங்களில் சியான் விக்ரம் நடித்து நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

அம்பி – ஒழுங்கு விரும்பும் சட்டவாதி. ரெமோ – காதலுக்காக எல்லாம் செய்யும் காதலன். அந்நியன் – சமூக அவலங்களுக்கு எதிராக போராடும் மர்ம மனிதர்.

இன்றைய தலைமுறையினரை கூட கவரும் வண்ணம் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில் முதன்முறையாக 100 கோடி வசூலை கடந்த ஒரே தமிழ் படம் அந்நியன் தான். இத்திரைப்படம் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் மட்டும் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

வாங்கிய விருதுகள்!

அந்த காலகட்டத்தில் வித்தியாசமான சிந்தனையுடன் படம் எடுத்த இயக்குனர் சங்கருக்கு 2006 ஆம் ஆண்டு “பெஸ்ட் இயக்குனருக்கான” விருது வழங்கப்பட்டது. சங்கரின் இந்த பிரம்மாண்டமான படைப்பு ஹிந்திலும் “Aparichit” என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஒரே நேரத்தில் மூன்று தத்ரூபமான கதாபாத்திரத்தை கண்முன் கொண்டு வந்த சியான் விக்ரம் நடிப்புக்கு “பெஸ்ட் ஆக்டர்” என்ற விருது வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இப்படத்துக்கு வேற லெவலில் இசையமைத்த ஹாரீஸ் ஜெயராஜுக்கு “பெஸ்ட் மியூசிக் டைரக்டர்” என்ற விருதும் வழங்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு பிறகு!

அந்நியன் திரைப்படம் வெளியான இந்த ஜூன் 18ஆம் தேதியை மறக்காமல் நினைவு கூறும் வகையில் ரசிகர்கள் வலைத்தளங்களில் #20YearsOfAniyan என்று ஹாஸ்டேக் போட்டும், அப்பட பாடல்களை வலைதளத்தில் பதிவிட்டும் விக்ரமுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

ஷங்கர் பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தார், ஆனால் தற்போது ஷங்கர் கூட சுஜாதா இல்லாத படங்கள் தோல்வியை சந்தித்தது. அதிலிருந்து ஷங்கரின் சாம்ராஜ்யம் கோலிவுட் வட்டாரத்தை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →