அட! போட்டி விஜய்க்கும், அஜித்துக்கும் இல்லையாம்!. வான்டடாக மீம்ஸ் போட்டு வம்பிழுக்கும் டாப் ஹீரோவின் விசுவாசிகள்

Thalapathy Vijay: நம்ம சினிமாவில் போட்டி என்றாலே அது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு தான். இந்த இரு ஹீரோக்களின் படங்களின் அப்டேட்டுகள் வர ஆரம்பித்தாலே இணையத்தில் ஒரு பெரிய போராட்ட களமே நடந்து விடும்.

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் GOAT திரைப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த முறை அஜித் ரசிகர்கள் விஜய் பற்றி அவ்வளவாக எந்த ட்ரோல் மீம்ஸ்களும் போடவில்லை.

ஒரு வேளை விஜய் சினிமாவில் இருந்து விலகப் போகிறார் இனி இந்த விளையாட்டு வேண்டாம் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ. ஆனால் தற்போது அந்த இடத்தை நடிகர் சூர்யாவின் விசுவாசிகள் பிடித்திருக்கிறார்கள்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து GOAT படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற தேதியை அறிவிக்க இருப்பதாக அப்டேட் ஒன்றை கொடுத்தார்.

அதை தொடர்ந்து ட்விட்டர் வலைதளம் சூர்யாவின் விசுவாசிகள் போடும் மீம்ஸ்களால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இவர்கள் விஜய் நடித்த தோல்வி படங்களை எல்லாம் லிஸ்ட் போட்டு சொல்லி அதே போல் GOAT படமும் தோல்வி அடைந்து விடும் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் சூர்யாவின் உயரத்திலிருந்து, அவருடைய படங்கள் சமீப காலமாக தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை என அத்தனையையும் மீம்ஸ்களாக போட்டு பதிலடி கொடுத்து வருகிறார்கள். இணையத்தை கலக்கும் மீம்ஸ்களை பற்றி பார்க்கலாம்.

வம்பிழுக்கும் டாப் ஹீரோவின் விசுவாசிகள்

Vijay vs Suriya
Vijay vs Suriya
Vijay vs Suriya
Vijay vs Suriya
Vijay vs Suriya
Vijay vs Suriya
Vijay vs Suriya



arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →