எனக்கு பின்னால் நடிக்க வந்து 100 கோடி சம்பாதிக்கிற.. நான் மட்டும் என்ன? கோபத்தில் அரசியலுக்கு வந்த ராதிகா

Radhika Sarathkumar: வாயுள்ள புள்ள பொழச்சிக்கும் என்று சொல்லுவாங்க, அந்த ரகத்தை சேர்ந்தவர் தான் ராதிகா. நடிகை ராதிகா மீது ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும், 80 மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் திறமைசாலியானவர் இவர் என்பதை மறுக்க முடியாது.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலுமே சாதித்து காட்டிய நடிகை இவர். மேடைப் பேச்சில் அப்பா எம் ஆர் ராதா, அண்ணன் ராதாரவி இரண்டு பேரை போலவே திறமைசாலி. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சமயத்திலேயே ராதிகாவின் அரசியல் பேச்சை பார்த்து அசந்தவர்கள் அதிகம்.

நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் என்னவோ தென்காசி, செங்கோட்டை தொகுதிகளில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிவிட்டது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட ராதிகா அரசியல் களம் காணவில்லை. சமத்துவ மக்கள் கட்சி என்று ஒன்று இருக்கிறது என்பதையே தமிழக மக்கள் மறந்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தபோது, சரத்குமார் தன்னுடைய கட்சியை பாஜகவுடன் இணைத்து விட்டார்.

தன்னுடைய மனைவியை கேட்டுத்தான் அந்த கட்சியில் சேர்ந்ததாக அவரே மேடையில் சொல்லி இருந்தார். சொந்தமாக கட்சி நடத்திய இனி ஒரு புண்ணியம் இல்லை என ராதிகா தான் இதற்கு ஐடியா கொடுத்திருப்பார் போல.

மேலும் ராதிகாவுக்கு சமீப காலமாக பண பிரச்சனையும் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கிறது. ரேடான் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சன் டிவியில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தார். ஆனால் சன் டிவி இப்போது ராதிகாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்பது போல் தெரிகிறது.

கோபத்தில் அரசியலுக்கு வந்த ராதிகா

மேலும் சினிமாவிலும் ராதிகாவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்பு இல்லை. அதே போல தான் நடிகர் சரத்குமாரும் வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். அதே நேரத்தில் சினிமாவில் ராதிகாவுக்கு பின்னால் வந்த குஷ்பூ பிஜேபியில் இணைந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.

இந்த ஒரு வருட காலகட்டத்தில் பல திட்டங்களின் கமிஷன் மூலம் கிட்டத்தட்ட நூறு கோடி சம்பாதித்து விட்டார். எப்படி பார்த்தாலும் சினிமாவில் தனக்கு சீனியராக இருந்த குஷ்பூ இப்போது கை மேல் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் தான் ராதிகா பிஜேபி கட்சியில் இணைய திட்டமிட்டதோடு, தேர்தலிலும் நிற்கிறார். ராதிகாவின் பேச்சு திறமை எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். இனி போக போக தமிழக பிஜேபி கட்சியில் குஷ்பூவை விட பெரிய இடத்திற்கு அவர் வந்து விடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →