நன்றிகெட்ட_ரஞ்சித் – வாழ்க்கை பிச்சை போட்ட ரஜினியவே அசிங்கப்படுத்துறியா.? நக்கலாக சிரித்ததால் கொந்தளித்த விசுவாசிகள்

Pa Ranjith : ரஞ்சித்துக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் நன்றிகெட்ட_ரஞ்சித் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். திடீரென ரஞ்சித்தை விமர்சித்து ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்வதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

அதாவது பிரபல பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பா. ரஞ்சித் பதில் அளித்து வந்தார். அந்த வீடியோ நேற்று வெளியான நிலையில் அதில் சில கிளிப்ஸை வெளியிட்டு பா ரஞ்சித்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

pa-rajinth
pa-rajinth

பொதுவாகவே பா ரஞ்சித்தின் படங்கள் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்காக போராடும் கதைக்களமாக தான் இருக்கும். பெரும்பாலும் ஜாதி அரசியல் படங்களை தான் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி மற்றும் காலா படங்களையும் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இப்போது பத்திரிகையாளர் பா ரஞ்சித்திடம் தலித் அரசியலை உங்கள் படங்களில் ரஜினி வழியாக சொல்லி உள்ளீர்கள்.

rajinth
rajinth

இது ரஜினிக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. மற்ற மொழிகளில் இதே போல் பெரிய நடிகரை வைத்து இவ்வாறு படம் எடுக்க முடியாது. மேலும் மலையாள சினிமாவில் பல வருடங்களாக படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும் இதுபோன்ற ஒரு படம் கூட வெளியாகவில்லை என்று கூறினார்.

ரஜினியை பற்றி பேசிய போது ரஞ்சித் நக்காலாக சிரித்திருந்தார். மேலும் தனது படங்கள் மூலம் ரஜினியை பா ரஞ்சித் பயன்படுத்தியுள்ளாரா என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆவேசம் கொண்டுள்ளனர். ரஞ்சித்துக்கு வாய்ப்பு கொடுத்து சினிமாவில் அடையாளமும், அந்தஸ்தும் கொடுத்தது ரஜினி தான்.

pa-ranjith
pa-ranjith

மேலும் ஆரம்பத்தில் ரஜினியிடம் வாய்ப்பு கேட்கும் போது இது உங்களுக்கு இன்னொரு படம், ஆனால் இதுதான் என்னுடைய ஃபியூச்சர் என பா ரஞ்சித் கேட்டிருந்தார். இப்போது நல்ல நிலைமைக்கு வந்தவுடன் ரஜினியையே அசிங்கப்படுத்தி விட்டார் என கொந்தளித்து உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →