லைக்காவை மிரளச் செய்த அஜித்தின் கட்டளை.. கட் அண்ட் ரைட்டாக செக் வைத்த ஏகே

நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்திற்கு பிறகு வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்தாலும் அங்கேயே இருந்து கொண்டு தன்னுடைய அடுத்த பட வேலைகளை ஆரம்பித்து விட்டார். ஏகே 62 விலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கிய நிலையில் அடுத்து எந்த இயக்குனர் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற மிகப் பெரிய கேள்வி இருந்து வந்தது. தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்குவதாக உறுதியாகி இருக்கிறது.

ஏகே 62 வேலைகள் தொடங்கியதில் இருந்தே நடிகர் அஜித் இந்த படத்தின் கதை தேர்வில் ரொம்பவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்ட பிறகு தான் படக்குழு இயக்குனர் மகிழ் திருமேனியை தேர்ந்தெடுத்திருக்கிறது. மேலும் இந்த படத்தின் கதையில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டம் வேண்டும் என்று அஜித் குமார் எதிர்பார்க்கிறாராம்.

இதற்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுவது நடிகர் அஜித்குமார் இந்த படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகு இரண்டு வருடங்கள் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்கப் போகிறாராம். ஏற்கனவே துணிவு திரைப்படம் முடிந்த பிறகு அஜித்குமார் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்குவார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது ஏகே 62 ரிலீசிற்கு பிறகு தான் அஜித் இந்த திட்டத்தை தொடங்க இருக்கிறார்.

மேலும் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மார்ச் மாதம் தொடங்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். மேலும் இந்த படம் வரும் தீபாவளி அன்று கண்டிப்பாக ரிலீஸ் ஆக வேண்டும் என்று அஜித் குமார் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இதனால் ஏ கே 62 படக்குழு கண்டிப்பாக விரைவாக செயல்பட்டே ஆக வேண்டும் என்ற நிலைமை தான் தற்போது இருக்கிறது.

மேலும் படத்திற்கான பட்ஜெட் என்று முன்னதாகவே எந்த தொகையையும் நிர்ணயிக்கக் கூடாது என்றும் படத்தின் வேலைகள் எவ்வளவு செலவில் நடக்கிறதோ நடக்கட்டும், படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு கணக்கு வழக்குகளை பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகர் அஜித்குமார் கட் அண்ட் ரைட்டாக லைக்கா நிறுவனத்திடம் கூறிவிட்டாராம்.

சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற துணிவு படத்தின் வெற்றி மற்றும் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் ரீச் என நடிகர் அஜித்குமாருக்கு அவருடைய 62 ஆவது படத்தின் மீது மிகப்பெரிய அழுத்தம் உருவாகி இருக்கிறது. வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற தீர்மானத்தில் இருப்பதால் அஜித் குமார் ஏகே 62 படத்தின் கதையை செதுக்கி வருகிறார் என்றே சொல்லலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →