நீங்களும் உங்க படமும் ஸ்காட்லாந்தில் கெத்து காட்டும் அஜித்.. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் சமீபத்தில் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அஜித்குமாரின் அண்மைக்கால திரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது துணிவு திரைப்படம் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளில் கூட ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

துணிவு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு நடிகர் அஜித்குமார் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக போர்ச்சுகல், லண்டன், ஸ்காட்லாந்து போன்ற இடங்களில் தன்னுடைய பயணத்தை செய்து கொண்டிருக்கிறார். அண்மை காலமாக நடிகர் அஜித்தின் சுற்றுப்பயணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பயங்கர வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் ரக்சா என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த ஒரு வீடியோவில் நடிகர் அஜித்குமார் டி-ஷர்ட் அணிந்தவாறு கொட்டும் மழையில் செம கூலாக கார் ஓட்டி வருகிறார். அதேபோன்று மற்றொரு வீடியோவில் வெள்ளை நிற சட்டை அணிந்தவாறு மலைப்பகுதியில் கார் ஓட்டுகிறார்.

அஜித் குமாரின் வீடியோக்களை பகிர்ந்திருந்த அந்தப் பெண் மேலும் சில புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார். அதில் நடிகர் அஜித்குமார் ஸ்காட்லாந்தில் சாலையோரங்களில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவருடைய காருக்கு எரிபொருள் நிரப்புவது போன்று நிற்கும் புகைப்படம் என நிறைய புகைப்படங்களை பகிர்ந்து இருந்த அந்த பெண் தனக்கு பிடித்த தருணம் என்றும் அந்த புகைப்படங்களை பற்றி பதிவிட்டிருந்தார்.

ஏ கே இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு விரைவில் சென்னை திரும்ப இருக்கிறார். அவருடைய 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் கதையில் திருப்தி இல்லாததால் லைக்கா நிறுவனம் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் குமார் சென்னை திரும்பிய சில தினங்களிலேயே அவருடைய 62 ஆவது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்போடு ரிலீஸ் தேதியும் வெளியானது போல் தான் ஏகே 62 வின் அறிவிப்பும் ரிலீஸ் தேதியுடன் வெளியாகும். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகளை நான்கு மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →