நூறு கோடி வசூல் வேட்டைய முடிச்ச தனுஷ்.. அடுத்தடுத்து வெளிவர உள்ள படங்கள்

Actor Dhanush movie Captain Miller will be release on OTT:சாணிகாயிதம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் சிவராஜ்குமார் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர். தனுஷின் இத்திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை கிளப்பி பொங்கலுக்கு ரிலீசானது. 50கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தமிழ், தெலுங்கு,  கன்னடம் ஹிந்தி என பல மொழிகளிலும் வெளிவந்து வெற்றி நடைபோட்டது.

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தில் தன் குடும்பத்தையும், குடும்பத்திற்கு ஏற்பட்ட சமூக அவலங்களையும் பழி தீர்க்கும் வண்ணம் சிறப்பாக நடித்திருந்தார் தனுஷ். அதையே சற்று மெருகேத்தி ஊர் மக்களுக்காகவும், ஊர் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்காகவும் மற்றும் சுதந்திர போராட்டத்திற்காக என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிந்திருந்த திரைப்படமே கேப்டன் மில்லர்.

நம்ப முடியாத ஹீரோயிசத்தை தனுஷ் நம்ப வைத்தது, துப்பாக்கி தோட்டாக்கள் என அதீத வன்முறை,  சமூக அவலத்திற்கு எதிரான மிடுக்கான வசனங்கள் என போட்ட திட்டத்தின் படி தமிழ்நாட்டில் வசூலை தூக்கி அடித்தார் கேப்டன் மில்லர்.

ஆனால் ஆந்திரா, கன்னடா என இரு மாநிலங்களிலும் தனுஷ் போட்ட கணக்கு தவிடு ஆகியது. ஏனென்றால் ஆந்திராவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் மகர சங்கராந்திக்கு இறங்கியது ஒரு காரணம். மேலும் தனுஷ் அளவிற்கு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கதையில் அழுத்தங்கள் கொடுக்கப்படாததால் கன்னட ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால் கர்நாடகாவில் தர ரைட்டுக்கும் கீழாகவே உரிமையே வாங்கி வசூலையும் சொல்லி முடித்து விட்டனர்.

பல சர்ச்சைகளுக்கு இடையே வெளியான கேப்டன் மில்லர் ஓரளவு வசூலில் முன்னேற்றம் கண்டாலும் படிப்படியாக 100 கோடி கிளப்பில் இணைந்தது. திரையில் வந்து நான்கு வாரங்களை கடந்த பின்பே படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்ற நிபந்தனையை தகர்த்தெறிந்து  ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

தனுஷ் மூணு வித கெட்டப் களில்  தெறிக்க விடும் கேப்டன் மில்லர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.  பல கலவையான விமர்சனங்களை சந்தித்து இருந்த போதும் வசூலில் லாபத்தையே சம்பாதித்தது தனுஷின் கேப்டன் மில்லர். தற்போது சேகர் கம்லாவின் இயக்கத்தில் டி51 படத்தில் நடித்த வருகிறார் தனுஷ் மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ராயன் போன்ற இவரின் படங்கள் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →