வெற்றிமாறன், சுதா கொங்காராவை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த சூர்யா.. வருஷகணக்கா சொல்லும் காரணம்

Actor suriya’s Kanguva and Suriya 43 movie update: அன்பானவன், அசராதவன், எதற்கும் துணிந்தவன் என பெயர் எடுத்த சூர்யா தற்போது இந்திய சினிமாவின் பெருமையாக மாறியுள்ளார். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில்  மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே திஷா பதானி பாபி தியோல் ஆகியோருடன் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்து ரிலீஸ்க்கு காத்துக் கொண்டிருக்கிறது. ஆக்சன் மற்றும் திரில்லருடன் டைம் பீரியட் மற்றும் பான்  இந்தியா மூவியாக உருவாகியுள்ள கங்குவா அதிக மொழிகளில் வெளியாகி சாதனை படைக்க துடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குனருள் ஒருவரான வெற்றிமாறன் மற்றும் சூர்யா இணையும் வாடிவாசல் அதிக அளவு எதிர்பார்க்கப்பட்டது.  இதற்காக பயிற்சி மற்றும் டெஸ்ட் சூட் முதலானவைகளும் எடுக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் சந்திப்பு  வாடிவாசல் கனவை தவிடு பொடியாக்கியது. வாடிவாசல் படம் வேண்டாம் என்று விலகுவதாக அதிரடியாக அறிவித்ததார் சூர்யா .

இதனைத் தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படத்திற்கு பின் வெற்றிக் கூட்டணியான சுதா கோங்குரா மற்றும் ஜிவி பிரகாஷ் குமாருடன் மீண்டும் இணைகிறார் சூர்யா. கங்குவா படத்தின் போதே கடந்த அக்டோபர் மாதத்தில் சூர்யா 43 படத்திற்கான  அறிவிப்பு வெளியானது.

சுதா கோங்குரா மற்றும் சூர்யா காம்பினேஷனில் உருவாகும் இந்த படத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான போராளியாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் கதையில்  நடிக்க உள்ளார். மேலும் சூர்யாவுடன், இவரின் தீவிர ரசிகர் துல்கர் சல்மானும், தமன்னாவின் காதலர் விஜய் வர்மாவும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

கல்லூரி காலத்தை மையமாக வைத்து உருவாகும் இதில் நீண்ட காலத்திற்குப் பின்பு துல்கர் சல்மானின் ஜோடியாக நஸ்ரியா கம்பேக் கொடுக்க உள்ளார். இவ்வாறு பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி இருக்கும் சூர்யா 43 தொடங்காமல் சூர்யா இழுத்து அடித்துக் கொண்டே வருவதாக தகவல்.

கங்குவாவை முடித்த பின்னும் சுதா கோங்குராவை வெய்ட்டிங்கில் வைத்து பாலிவுட் இயக்குனர் ஓம் பிரகாஷ் உடன் கர்ணா என்கின்ற சரித்திர படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருடன் இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் சுதா கோங்குராவுடன் இணையும் சூர்யா 43 படப்பிடிப்பு தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →