விரல் விட்டு என்னும் விஜய் சேதுபதியின் 5 ஹிட் படங்கள்.. சிங்கிள் ஹீரோவாக கலங்க வைத்த 96 ராம்

Actor Vijay sethupathi 5 hit movies: “உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்று எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் கட்டிப்பிடித்து முத்தம் வைத்து நடிகர்களை வசப்படுத்துவதில்” விஜய் சேதுபதிக்கு இணை யாரும் இல்லை. சினிமாவில் தனக்கான எந்த ஒரு பலமான பின்புலமும் இல்லாமல்  கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாது சரியாக பயன்படுத்தி  சினிமாவில் ஒரு டானாக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி.

இன்று வில்லனாக மிரட்டி வரும் விஜய் சேதுபதி  நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் இருந்தாலும் இவர் தனி ஒரு ஹீரோவாக கலக்கிய 5 படங்கள் இதோ,

பீட்சா: ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு நாளை இயக்குனர் நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ் அறிமுகம் கிடைத்து. அவருடன் குறும்படங்களில் நடித்தார்.  பேய் கதை போன்று உருவகப்படுத்தி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விஜய் சேதுபதி. ஏழு மடங்கு லாபத்துடன் சினிமா ஆர்வலர்களை வாயடைக்க வைத்தது பீட்சா.

தர்மதுரை: “ஐயோ சாமி இந்த மாதிரி ஒரு டாக்டர் நம்ம ஊருக்கு வர மாட்டாரா!” என்று கிராமத்து ஜனங்களை ஏங்க வைத்தது விஜய் சேதுபதியின் தர்மதுரை.  மிதமிஞ்சி அறிவுடன் வரும் டாக்டர், குடும்பம் என்று வந்ததும் பாசத்தால் பொட்டி பாம்பாக அடங்கி தாயின் அரவணைப்பில் உருகினார் தர்மதுரை. இவரது இயல்பான ஆட்டத்தில் “மக்க கலங்குதப்பா” ரசிகர்கள் அனைவரையும் கலங்கடித்தது.

நானும் ரவுடிதான்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான்   மாபெரும் வெற்றி திரைப்படம் ஆகும். சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அழுத்தமான கதை இல்லாவிட்டாலும்  தனது திறமையான நடிப்பினால் விஜய் சேதுபதி, நயன்தாரா,ஆர் ஜே பாலாஜி அனைவரும் படத்தை தூக்கி நிறுத்தி இருந்தனர்.  தன் உடல்  மொழியை பிளஸ் ஆக்கிக் கொண்டு சாதாரண டயலாக்கை காமெடியாக மாற்றி ரசிகர்களை வயிறு வலிக்க வைத்திருந்தார் விஜய் சேதுபதி.

96: கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாகவே தோன்றினாலும் நாயகி தொட்டதும் கீழே விழுந்த விஜய் சேதுபதியின் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் விழுந்து தான் போனார்கள். இவரது நடிப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை என்னும் அளவுக்கு நாயகி மீதான கைகூடாத காதலில் இளம் நெஞ்சங்களை உருக வைத்திருந்தார் விஜய் சேதுபதி.

சேதுபதி: “சட்ட திட்டம் எல்லாம் நான் எப்பவும் மதிச்சது இல்லை”ன்னு திமிரான காவல்துறை அதிகாரியாக, “ஏய் மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ” என்று எதிரிகளை  வான்டட் ஆகத் தேடிப் போய் அலற விட்டிருப்பார் விஜய் சேதுபதி. காவலானாலும் காதலுக்கு சளைத்தவன் அல்ல என்று ரொமான்ஸில்  கண்ணியமுடன் நடந்த சேதுபதியை  ரசிகர்களால் மறக்க இயலாது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →