தில் ராஜுக்கு இவ்வளவு தில்லா.! தளபதி வியந்து பார்த்த சம்பவத்தை ஷேர் செய்த வம்சி

நடிகர் விஜய்யின் நடிப்பில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியான திரைப்படம் தான் வாரிசு. நீண்ட வருடத்திற்கு பிறகு நடிகர் விஜய் குடும்ப பின்னணி திரைக்கதையில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. மற்றபடி பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே சந்தித்திருக்கிறது.

இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தை தயாரித்தவர் தில் ராஜு. 2003 ஆம் ஆண்டு வெளியான தில் படத்தை முதன் முதலில் தயாரித்ததால் தன்னுடைய பெயருடன் அந்தப் படத்தின் பெயரையும் சேர்த்து தில் ராஜு என வைத்துக் கொண்டார். வெறும் பெயரில் மட்டுமல்ல நிஜமாகவே இவர் தில்லானவர் தான் என்பதை வாரிசு படத்தின் பல சம்பவங்களில் நிரூபித்து இருக்கிறார்.

வாரிசு பட சூட்டிங்கின் போதே பல பிரச்சனைகள் வந்தன. ஒரு கட்டத்தில் படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்வது என்பதே மிகப்பெரிய சவாலாக தில்ராஜுக்கு இருந்தது. ஆனால் அது எல்லாம் அசால்டாக கடந்து வந்து விட்டார் இவர். இவர் பேசிய ஒரு சில பேட்டிகள் கூட பலரும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருந்தது. அதையும் அவர் ரொம்ப ஈசியாக சமாளித்து விட்டார்.

சமீபத்தில் தில் ராஜுவை பற்றி இயக்குனர் வம்சி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது வாரிசு படம் தமிழ்நாட்டில் ஜனவரி 11 அன்றும், ஆந்திராவில் ஜனவரி 14 அன்றும் ரிலீஸ் ஆகப் போவதை நடிகர் விஜய்யிடம் சொல்லும்போது இவர் ரொம்பவும் ஓவர் கான்பிடென்ட் ஆக ஜனவரி 11 அன்று தமிழ்நாட்டில் வாரிசு பிளாக்பஸ்டர் என்றும், ஜனவரி 14 ஆந்திராவில் பிளாக்பஸ்டர் என்றும் சொன்னாராம்.

மேலும் வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டில் பிளாக்பஸ்டர் ஆவது கண்டிப்பாக ஆந்திரா ரிலீசின் போது பெரிதளவில் உதவியாக இருக்கும் என்றும் கூறினாராம். இதைக் கேட்டு நடிகர் விஜய் மிரண்டு போய்விட்டாராம். இவர் எப்படி இவ்வளவு கான்பிடென்ட் ஆக இந்த விஷயத்தை சொல்லுகிறார் என்று ரொம்பவே ஆச்சரியப்பட்டு போனாராம்.

அப்போது மட்டும் அல்ல ரிலீசுக்கு பிறகும் தில்ராஜு வாரிசு படத்தை வின்னர் என்று ரொம்பவும் தைரியமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அதேபோன்று தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு திரைப்படம் தான் வின்னர் என்று அவர் பங்குக்கு சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். உண்மையாகவே இவர்கள் வசூலின் புள்ளி விவரத்தை வெளியிடும் வரை பொங்கல் வின்னர் வாரிசா, துணிவா என்பதை யாராலும் சொல்ல முடியாது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →