தாராளமாக கிளாமர் காட்ட களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. கேட்டவுடன் கிக் ஏத்தும் படத்தின் டைட்டில்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்றைய தமிழ் சினிமாவின் திறமையான ஹீரோயின்களில் ஒருவர். தன்னுடைய சிறந்த நடிப்பினாலும், தரமான கதை தேர்வினாலும் டாப் ஹீரோயின்களில் ஒருவராக முன்னேறி கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ட்ரைவர் ஜமுனா, சூழல், தி கிரேட் இந்தியன் கிட்சன் போன்ற கதைகளில் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

மாடர்ன் மங்கையாக இருக்கட்டும், கிராமத்து கதைகளாக இருக்கட்டும், குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கட்டும் அத்தனை கதைகளிலுமே பக்காவாக பொருந்துகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் இப்போது படுபிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். வரும் 2025 வரைக்கும் இவர் கைவசம் படங்கள் இருக்கின்றன. இவர் தான் கோலிவுட்டின் அடுத்த நயன்தாரா என்று கூட சொல்கிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு கதைக்களங்கள் ட்ரெண்ட் ஆகும். அப்படி இப்போது பயங்கர ட்ரெண்டில் இருப்பது பையோபிக் கதைகள் தான். அறிவியல், விளையாட்டு, சினிமா துறைகளை சார்ந்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறை படங்களாக எடுத்து வருகின்றனர். இதுபோன்ற பையோபிக் படங்கள் இப்போது வெற்றி பெறுகின்றன.

அப்படி ஒரு பையோபிக் கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 90ஸ் காலகட்டத்தில் கிளாமர் குயினாக இருந்த ஒரு நடிகையின் வரலாற்று கதையை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் எடுத்து இருக்கிறார். அந்த நடிகையின் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே தத்ரூபமாக எடுக்க இருக்கிறார்கள். விரைவில் சூட்டிங்கும் ஆரம்பிக்க இருக்கிறது.

90ஸில் தனது கவர்ச்சியின் மூலமும், கண்ணழகின் மூலமும் இளைஞர்களை கிறங்கடித்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கியவர் இவர். இவர் இறந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்றளவும் இவருக்கென்று ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட சில்க் ஸ்மிதாவாக தான் நடிக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த படத்திற்கு சொப்பன சுந்தரி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு என்றால் கண்டிப்பாக பட காட்சிகளில் அதீத கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டி வரும். இதற்கெல்லாம் தயாராக தான் ஐஸ்வர்யா இந்த படத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறார். சில்க்கின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி ஏற்கனவே பாலிவூடில் டர்ட்டி பிக்சர் என்னும் படம் ரிலீஸ் ஆனது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →