ஹன்சிகா.. வெறித்தனமாக வெளியான ஒர்க்அவுட்

Actress Hansika Latest gym workout photos: குட்டி குஷ்புவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை ஹன்சிகா மோத்வானி, முதலில் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் தளபதி விஜய் உடன் வேலாயுதம் படத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவிற்கு மார்க்கெட் குறைந்ததும், அண்மையில் தொழிலதிபரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இருந்தாலும் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக பார்ட்னர், MY3 போன்ற படங்களில் நடித்தும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஹன்சிகா ஜிம்மில் தலைகீழாக தொங்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிறது.

ஏற்கனவே ஹன்சிகா ரொம்பவே மெலிந்து தான் இருக்கிறார். அதுவே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. முன்பு கொழுக்கு முழுக்குனு இருந்த ஹன்சிகாவை தான் பிடித்தது. ஆனால் இப்போது மேலும் மேலும் உடல் எடையை குறைத்து, பார்ப்பதற்கு பல்லி போல் தெரிகிறார்.

அதுவும் இப்போது வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஹன்சிகா, டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகளை பெறுவதற்காகவே இப்படி எல்லாம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை பிரமித்து பார்க்க வைக்கிறது. 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →