அதுகூட சாவதே மேல்.. வெறுத்துப்போய் பேசிய சமந்தா

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான முன்னணி நடிகையான சமந்தா, தற்போது தமிழிலும் தெலுங்கிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இவர் தெலுங்கு பிரபலம் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அதன் பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்துகொண்டார்.

சமந்தா விவாகரத்துக்குப் பிறகு நிறைய படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தினமும் ஜிம் போவது, யோகா செய்வது, என்று தனது உடலையும் மனதையும் அழகாக வைத்துக் கொள்கிறார். எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தனக்கென ஒரு உலகத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கூட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் தனது துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது எந்த ஒரு அடக்கு முறை இல்லாமல் தனியாக சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்.

இவர் செல்லபிராணிகளிடம் அதிக நேரம் செலவு செய்து வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதாவது, ‘இந்த நாய் கூட தனியா இருந்து சாக தான் போற’ என்று கூறியுள்ளார். அதற்கு, ‘இந்த உலகத்தில் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அது எனக்கு போதும். எனக்கு இதைவிட வேறு அதிர்ஷ்டம் தேவை இல்லை’ என்று கூறியுள்ளார்.

ஒருசிலர் ரசிகர்கள் சமந்தாவிற்கு இப்படிப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகளை எல்லாம் தலைக்கு ஏற்றாமல் முன்னேறுங்கள் என்றும், சமந்தா பதிலடி கொடுத்த கமெண்டுக்கு பாராட்டு தெரிவிக்கின்றனர். தற்போது சமந்தா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடித்த நிலையில் அந்த படம் வருகிற டிசம்பர் 23-ம் தேதி ரிலீசாக உள்ளது.

இதைத்தொடர்ந்து விக்ரம் படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கமுள்ள தளபதியின் 67-வது திரைப்படத்தில் சமந்தா விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

samantha-twit
samantha-twit
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →