சிகிச்சைக்கப் பின்பும் தாமதமாகும் விடாமுயற்சி.. வைரலாகும் புகைப்படத்தால் பதறிப்போன லைக்கா

Actor Ajith : அஜித் விடாமுயற்சி படத்தை தொடங்கியது போதும் அவருக்கும் சரி, லைக்காவுக்கும் சரி ஏதாவது தொடர்ந்து ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. அதோடு ரசிகர்களும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை கேட்டு அழுத்து விட்டனர்.

ஆரம்பத்தில் அஜர்பைஜானில் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பை முடித்து விட்டனர். இன்னும் 35 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மிச்சம் இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்புக்கு சென்ற போது அங்கு வானிலை சரியாக அமையாததால் திரும்பி வந்து விட்டனர்.

அதன்பின்பு லால் சலாம் தோல்வியால் லைக்கா நிதி நெருக்கடியில் சிக்கியது. இதை அடுத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால் அதற்குள்ளாக அஜித்துக்கு காதின் கீழே கட்டி இருந்ததாகவும், அதை அகற்ற சிகிச்சை மேற்கொண்டு இருந்தனர்.

ஆகையால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறிது நாட்கள் விடாமுயற்சி படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்தார். மேலும் தனது மகன் ஆத்விக் உடன் அஜித் நேரத்தை செலவிட்டு வந்தார். இப்போது திடீரென பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மத்திய பிரதேசத்திற்கு பைக் ட்ரிப் சென்று அஜித்

அதாவது மத்திய பிரதேசத்திற்கு ஒரு சின்ன பைக் சுற்றுப் பயணம் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டான நிலையில் லைக்கா பதறி போய் உள்ளது. ஏனென்றால் ஏற்கனவே பைக்கில் வேர்ல்ட் டூர் செல்ல அஜித் திட்டமிட்டு இருந்தார்.

இப்போதும் பைக் ட்ரிப் கிளம்பிய நிலையில் அவர் எப்போது இதை முடித்து விட்டு விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று பதட்டத்தில் உள்ளனர். விடாமுயற்சி படம் இன்னும் தாமதமானால் லைக்கா மேலும் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த வருடமாவது இப்படம் ரிலீஸ் ஆகுமா என்ற ஏக்கத்தில் தான் ரசிகர்களும் உள்ளனர்.

பைக் ட்ரிப்புக்கு தயாரான அஜித்தின் புகைப்படம்

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →