லியோ பட ப்ரோமோவை பார்த்து விரக்தியில் அஜித்.. விபரீத முடிவு எடுத்த AK

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்பார்த்த தளபதி 67 படத்தின் டைட்டில் மற்றும் ப்ரோமோ வீடியோவுடன் அண்மையில் இணையத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. லியோ, ப்ளடி ஸ்வீட் என்ற டைட்டிலில் வெளியான இந்த ப்ரோமோ வீடியோ ரிலீசான சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்தது, தற்போது 2 கோடி பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த ப்ரோமோ வீடியோவில் விஜய் சாக்லேட் பேக்டரியில் இருந்து பகலில் சாக்லேட் தயாரிப்பது போன்றும், இரவில் கத்தியை நெருப்பில் தீட்டி தயாரிப்பது போன்றும் காட்சிகள் பிரம்மாண்டமாக காட்டப்பட்டுள்ளது. பேன் இந்தியா திரைப்படம் என்பதால் இப்படத்தின் டைட்டிலை ஆங்கிலத்தில் லியோ என வெளியிட்டுள்ளனர். லியோ என்றால் சிங்கம் என்ற அடிப்படையில் கட்டாயம் இப்படத்தில் விஜய் சிங்கம் போல் கர்ஜிக்கப் போகிறார் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகப் போகும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் அஜித்தின் ஏகே 62 படம் உருவாகுமா, ஆகாத என்ற சந்தேகம்,அஜித் தற்போது எடுத்துள்ள முடிவில் ஏற்பட்டுள்ளது. ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், திடீரென விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து விலக்கப்பட்ட என்ற செய்தி வெளியாகி பரபரப்பானது.

ஆரம்பத்தில் இதற்கு காரணமாக விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் விலக்கப்பட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிரம்மாண்டமாக உள்ளதால் இக்கதையை பிற்காலத்தில் படமாக எடுக்கலாம் என அஜித் கூறியதாகவும், மேலும் தீபாவளிக்குள் ஏகே 62 படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அஜித் உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது இவரும் இப்படத்தை இயக்குவாரா, இல்லையா என இழுபறியில் உள்ளது. இதுமட்டுமில்லாமல் விஜயின் லியோ படத்தின் ப்ரோமோவை பார்த்த அஜித் சற்று ஸ்தம்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்தாண்டு தீபாவளிக்குள் இப்படத்தை ரிலீஸ் செய்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது,

அதற்குள் ஏகே 62 படத்தின் கதையை ரெடி செய்து அதனை படமாக எடுப்பதற்குள் அஜித் வேர்ல்ட் டூர் சென்றுவிட்டு வரலாம் என முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே ஏகே 62 படத்திற்கு பின் உலகம் சுற்றும் பிளானை திட்டம் செய்த நிலையில், ஏகே 62 படத்தின் கதி தற்போது என்னவென்றே தெரியாததால், இப்படத்தை தொடங்குவதற்குள் அஜித் வேர்ல்ட் டூருக்கு ரெடியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →