டிரைவர் ஜமுனாவாக மிரட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

சமீப காலமாக சோலோ ஹீரோயின் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். வத்திக்குச்சி பட இயக்குனர் கிங்ஸ்லின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தில் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

சற்று தாமதமாக வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் இப்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கால் டாக்ஸி ஓட்டுனராக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு எப்பவும் போல இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதிலும் சென்டிமென்ட் மற்றும் ஆக்சன் காட்சிகளில் அவர் பலரின் கைத்தட்டல்களையும் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் எதிர்பாராத வகையில் இருக்கும் கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கலந்திருக்கும் திரைக்கதையும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

அந்த வகையில் வில்லன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையே நடக்கும் காட்சிகளும் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இவ்வாறு படத்தை ஒற்றை ஆளாக தாங்கி பிடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அத்துடன் ஒரு சிறப்பான விஷயத்தையும் படக்குழு செய்துள்ளது.

அதாவது ஆண்களுக்கு நிகராக பெண் ஓட்டுநர்களாக இருக்கும் தொழிலாளர்களை பெருமிதப்படுத்தும் வகையில் இந்த படத்தின் ஸ்பெஷல் பிரீமியர் ஷோ பெண் ஓட்டுனர்களுக்கு போட்டு காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களுக்கான மரியாதையும் பட குழு செய்துள்ளது. இதற்காக படக்குழுவினரை பாராட்டி வரும் ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாக தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →