அஜித்-விஜய் பேன்ஸ் சண்டலாம் இப்படித்தான் ஆரம்பிக்குதா?. ஆன்லைன் விமர்சகரை கட்டம் கட்டிய ட்விட்டர்வாசிகள்

Ajith vs Vijay: நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் இணையதளங்களில் சண்டை போட்டுக் கொள்வது எப்போதுமே நடக்கும் விஷயம் தான்.

இது ஒரு கட்டத்தில் நடிகர்கள் இருவருக்குமே பெரிய அளவில் வெறுப்பை கொடுத்தது. தற்போது விஜய் அரசியல், அஜித் கார் ரேஸ் என்ற போனதும் இந்த பிரச்சனை கொஞ்சம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

நேற்று ட்விட்டர் Space-ல் நடிகர் அஜித்குமார் நடித்துக் கொண்டிருக்கும் குட் பேட் அக்லி படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பேன்ஸ் சண்டலாம் இப்படித்தான் ஆரம்பிக்குதா?

அப்போது ஆன்லைன் விமர்சகர் ஒருவர் உள்ளே நுழைந்து முதலில் நல்லவிதமாக பேச ஆரம்பித்திருக்கிறார்.

அதன் பின்னர் கோட் நல்ல படம் என்று சொன்னதோடு விடாது முயற்சி படத்தை பற்றியும் அஜித் ரசிகர்களுக்கு கோபம் வரும்படி பேசி இருக்கிறார்.

இடையில் யாரோ சங்கீதா என்ற பெயரை உபயோகப்படுத்தவும், இவர் ரொம்பவே கொதித்து எழுந்து யார் சொன்னது என கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.

உடனே ஒருவர் நான்தான் சொன்னேன் இப்ப என்ன என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு இந்த விமர்சகர் நீங்க எப்படி விஜயின் மனைவியை பற்றி பேசுவீர்கள் என்று ஆரம்பித்து பிரச்சனையை கிளப்பி விட்டதாகவும், அது மட்டும் இல்லாமல் அந்த சங்கீதா என்று சொன்னவரின் பர்சனல் விஷயங்களை ட்விட்டரில் கிளப்பி விட்டதாகவும் ட்விட்டர் வாசிகள் அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் #savegirlsfromprashanth என்ற ஹேஷ் டாக்கையும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Ajith vs Vijay
Ajith vs Vijay
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment