விஜய் ரசிகர்களுக்கு சூசகமாக அறிவுரை சொன்ன அஜித்.. இதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறதா!

சாதாரணமாகவே இணையத்தை ரணகளப் படுத்துவது விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் தான். இவர்கள் இரு தரப்பிடமும் எப்போதும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. சில மோசமான கருத்துக்களை பதிவிடுவதை எப்போதுமே இவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

இப்போது அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படம் ஒரே நாட்களில் வெளியாகிறது. இதனால் சொல்லவா வேண்டும், இணையமே அல்லோலபட்டு கிடக்கிறது. அதிலும் குறிப்பாக அஜித்துக்கு எதிராக தான் அதிக விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இதனால் துணிவு படத்திற்கு இப்போதே சில நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளது. மேலும் எல்லை மீறி போகும் விஜய் ரசிகர்களுக்காகவும், தனது ரசிகர்களுக்கும் ஒரு சிறப்பான வாட்ஸ்அப் மெசேஐை அஜித் பகிர்ந்துள்ளார்.

அதிலும் யாரையும் காயப்படுத்தும் விதமாக இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தான் சொல்ல வேண்டிய கருத்தை சொல்லி உள்ளார். அதாவது உங்களுக்கு சிறப்பான உத்வேகம் கொடுக்கும் நபர்களை மட்டுமே சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் உயர்ந்த இலக்குகள் வைத்தால் அதிக உத்வேகம் கிடைக்கும். எப்போதுமே நேர்மையான கருத்துக்களை பரப்புங்கள், பொறாமை மற்றும் வெறுப்பு ஆகியவற்றை தவிர்த்து விடுங்கள். ஒருவருக்கொருவரின் முழுமையான திறமையை வெளியே கொண்டு வர மற்றவர்களுக்கு உதவுங்கள்.

நீயும் வாழு அடுத்தவர்களையும் வாழவிடு என்று அஜித் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விஜய் ரசிகர்களை பார்த்து அஜித் பயந்துவிட்டார் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது. ஆனால் இது விஜய் மற்றும் அஜித் என இரு தரப்பு ரசிகர்களுக்குமே இந்த கருத்து பொருந்தும் என பெரும்பாலானோர்கூறி வருகிறார்கள்.

Ajith-WhatsApp-Message-For-Fans
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →