அஜித்துக்கு என்னதான் ஆச்சு? நாளுக்கு நாள் உடலில் ஏற்படும் மாற்றம்

50 வயது தாண்டினாலே ஹீரோக்கள் தங்களது முதிர்ச்சி தெரியாமல் இருப்பதற்கு பலவிதமான மேக்கப் கையாள்வது இயல்பு. ஆனால், அஜித் உடல் அமைப்பு மற்றும் ஹேர் ஸ்டைல் இயற்கையாக இருக்க வேண்டும் என்று சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் தான் வளம் வருவார்.

ஒரு காலத்தில் அது ட்ரெண்டானது தற்போது ஆக்டர் சதீஷ் அஜித் மற்றும் ஷாலினியை நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்கும்போது சற்று அதிர்ச்சியாக உள்ளது

54 வயதாகும் அஜித்திற்கு வயது முதிர்ச்சி என்பது முகத்தில் நன்றாக தெரிகிறது. அதை தாண்டி கண்களுக்கு கீழே தூக்கம் இல்லாததால் ஏற்படும் ஒரு வகையான வீக்கம் தெரிகிறது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வரும் அஜித் வருடத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்வேன் என்பதை ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார். இதனால் தனது அடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பதை சமீபத்தில் உறுதியும் செய்தார்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் உடலை பார்த்துக் கொள்ளுங்கள் ஏ கே என்பது போன்ற கமெண்ட்களை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கார் ரேசுக்காக கிட்டத்தட்ட 12ல் இருந்து 15 கிலோ வரை உடல்நிலையை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்காக குடிப்பழக்கம், அசைவ சாப்பாடு போன்றவற்றை டயட் காரணமாக தல அஜித் நிறுத்திவிட்டார். இதனை ஓப்பனாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். கடின உழைப்பால் சரியான தூக்கம் இல்லாதபோது முகத்தில் சில மாற்றங்கள் நேரடியாக தெரியும் அதுதான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →