365 நாளும் போட்டோவை இறக்கி விளம்பரம் தேடலாமா? மீண்டும் அஜித்தை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகி இருக்கிறது. வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் நேரடியாக மோதுகிறது. இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது துணிவு திரைப்படம் தொடர்பான ஒரு போட்டோ வெளியாகி உள்ளது.

அதில் அஜித் துணிவு திரைப்படத்திற்காக டப்பிங் பேசுகிறார். அந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை தன்னுடைய டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் அது குறித்து கடும் விமர்சனத்தையும் முன் வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ஒரு படத்திற்கு அதுவே விமர்சனம் என்று கூறிவிட்டு வருடத்தின் 365 நாளும் போட்டோவை இறக்கி விளம்பரம் தேடிக் கொள்வது சரியா என்று அவர் கேட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இதேபோன்று படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் என்று அனைவரும் மகிழ்வார்களே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது அஜித் ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ப்ளூ சட்டை மாறன் அஜித் குறித்து மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் சோசியல் மீடியாவில் அவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே பயங்கர சண்டை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் அஜித்தை சீண்டியுள்ளார். அதாவது அஜித் சமீபத்தில் ஒரு படத்தின் நல்ல கதை தான் அதற்கான ப்ரோமோஷன் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன்களில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது தெளிவானது.

அதைத்தான் தற்போது ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டு கிண்டலாக பேசியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அஜித் தற்போது தன்னுடைய பைக்கில் நாடும் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார். அது குறித்த போட்டோக்களும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவி வந்தது. அதையும் குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் இதன் மூலம் அவர் விளம்பரம் தேடிக் கொள்வதாக கூறியிருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துணிவு படத்தின் டப்பிங், அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்

ajith-thunivu
ajith-thunivu

ஏனென்றால் அஜித் இது போன்ற போட்டோக்களை வெளியிடுவது கிடையாது. ரசிகர்கள் தரப்பில் இருந்து தான் இப்படி போட்டோக்கள் வெளியாகும். அதனால் யாரோ சிலர் வெளியிடும் போட்டோக்களை வைத்துக் கொண்டு அஜித்தை குறை கூறுவது சரியல்ல என்று ப்ளூ சட்டை மாறனுக்கு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →